நள்ளிரவில் பெண்ணுடன் மோதல் – ரசிகர்களால் அடித்து நொறுக்கப்பட்ட பிரிதிவி ஷா கார், மும்பையில் பரபரப்பு

Prithvi-Shaw
- Advertisement -

டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிரிதிவி ஷா கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனையும் படைத்தார். ஆனால் நாளடைவில் அந்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத அவர் கடைசியாக கடந்த 2021 ஜூலை மாதம் இந்தியாவுக்காக விளையாடியிருந்தார். அதன் பின் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் தொடர்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி கடுமையாக போராடி சமீபத்திய நியூசிலாந்து டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் கடைசி வரை 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் அடுத்ததாக மார்ச் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் வாய்ப்பு பெறுவாரா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் பிரபல மாடல் அழகியை தனது மனைவி என்று குறிப்பிட்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்த அவர் பின்னர் அது யாரோ எடிட்டிங் செய்து விட்டார்கள் என்றும் ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் பல்டி அடித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு முடிவதற்குள் மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் பிரித்திவி ஷா சிக்கியுள்ளார்.

- Advertisement -

நொறுப்பட்ட கார்:
அதாவது நேற்று இரவு மும்பையில் உள்ள விமான நிலையத்தின் அருகில் இருக்கும் “சாண்டா க்ரஸ்” எனும் பிரபல 5 ஸ்டார் ஹோட்டலுக்கு தனது நண்பருடைய விலையுயர்ந்த காரில் பிரித்வி ஷா உணவு சாப்பிட சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது வழக்கம்போல சில ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு செல்ஃபி மற்றும் ஆட்டோகிராப் கேட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவரும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அந்த புகைப்படங்களால் திருப்தி அடையாத அவர்கள் மேலும் புகைப்படம் எடுக்குமாறு கேட்ட போது பிரிதிவி ஷா மறுத்துள்ளார்.

குறிப்பாக சுதந்திரமாக நண்பர்களுடன் டின்னர் சாப்பிட வந்துள்ளதாக பிரிதிவி ஷா கூறியும் அந்த நபர்கள் அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்ததாக தெரிய வருகிறது. அதனால் அதிருப்தியடைந்த அவர் உணவு சாப்பிட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்ததின் பேரில் ஹோட்டல் மேனேஜர் அவர்களை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது பிரிதிவி ஷா காரை சாலையின் அருகில் நின்று கொண்டு நிறுத்திய அந்த நபர்கள் பேஸ் பால் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

- Advertisement -

அதனால் கார் சேதமடைந்ததால் கோபமடைந்த பிரிதிவி ஷா வெளியே வந்து அவர்களை தடுத்துள்ளார். அப்போது அவர்கள் 50,000 பணம் கொடுத்தால் மட்டுமே அங்கிருந்து விலகிச் செல்வோம் என்று மிரட்டியதால் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு பிரிதிவி ஷா போன் செய்து புகார் கொடுத்துள்ளார். அத்துடன் அந்த சமயத்தில் மற்றொரு காரில் அங்கிருந்து அவர் கிளம்பிய நிலையில் அவருடைய நண்பர் ஆஷிஷ் சுரேந்திரா முறைப்படி காவல் அதிகாரிகளிடம் நடந்ததை புகாராக கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் பணம் கேட்டு பிரிதிவி ஷா நண்பரின் கார் மீது தாக்குதல் நடத்திய 8 நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதில் கடைசி நேர ட்விஸ்ட் என்னவெனில் பிரிதிவி ஷா மற்றும் அவருடைய நண்பர்கள் செல்பி எடுக்க வந்த தங்களது குழுவில் இருந்த ஒரு பெண்ணிடம் உடல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட காரணத்தாலேயே கோபமடைந்து அவருடைய காரை அடித்து நொறுக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:யோகி பாபுவிற்கு தனது பேட்டினை பரிசளித்த தல தோனி. எதற்கு தெரியுமா? – விவரம் இதோ

அந்த பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக இருக்கும் சப்னா கில் என்றும் தெரிய வருகிறது. அந்த வீடியோவில் நீங்கள் கிரிக்கெட்டராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று அந்த பெண் பேசுவதும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பெண்ணை பிரிதிவி ஷா கட்டையால் தாக்கு முயற்சிப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது. இதனால் பிரிதிவி ஷா மீது மற்றுமொரு சர்ச்சையும் ரசிகர்களிடம் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதில் உண்மை என்ன என்பது இறுதி கட்ட விசாரணையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement