இந்தியாவுக்கு செலக்ட்டான உற்சாகத்தில் சூப்பர்மேனாக மாறி மாஸ் கேட்ச் பிடித்த இந்திய கீப்பர் – ரசிகர்கள் வியப்புடன் பாராட்டு

- Advertisement -

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதார் கோப்பை 2023 தொடர் 2019க்குப்பின் இந்த வருடம் மீண்டும் நடைபெறுகிறது. 50 ஓவர்களை கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டை மையப்படுத்தி நடைபெறும் இத்தொடரில் ஜூலை 24ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற்ற 3வது லீக் போட்டியில் தெற்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற தெற்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 303/8 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு 117 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் மயங் அகர்வால் 64 (68) ரன்களும் குன்னும்மாள் அதிரடியாக 70 (61) ரன்களும் எடுத்தனர்.

அவர்களுடன் மிடில் ஆர்டரில் தேவ்தூத் படிக்கல் 17, ரிக்கி புய் 21, தமிழக வீரர் அருண் கார்த்திக் 21 (14) என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் மற்றொரு தமிழாக வீரர் நாராயன் ஜெகதீசன் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 72 (66) ரன்கள் எடுத்தார். மேற்கு மண்டலம் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே மற்றும் ரிஷி தவான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சூப்பர்மேன் கேட்ச்:
அதைத் தொடர்ந்து 304 என்ற கடினமான இலக்கை துரத்திய வடக்கு மண்டலம் அணி தெற்கு மண்டல பவுலர்களின் தெறிக்கவிடும் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 23 ஓவரில் வெறும் 60 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. கேப்டன் நிதிஷ் ராணா 4, அபிஷேக் ஷர்மா 10 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சுபம் கஜாரியா 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அனலை காட்டி 243 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற தெற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக கர்நாடகாவைச் சேர்ந்த இளம் வீரர் வித்வத் கவேரப்பா 5 விக்கெட்டுகளையும் விஜயகுமார் 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அப்படி படுதோல்வியை சந்தித்த வடக்கு மண்டலம் அணிக்கு விக்கெட் கீப்பர் ப்ரப்சிம்ரன் சிங் பிடித்த அபாரமான கேட்ச் மட்டுமே ஆறுதலாக இருந்தது என்றே சொல்லலாம். ஆம் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டல அணிக்காக விளையாடிய ரிக்கி புய் 39வது ஓவரில் மயங் டங்கர் வீசிய 2வது பந்தில் எட்ஜ் கொடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக பிட்ச்சான பின் திடீரென உள்ளே வந்ததால் சற்றும் எதிர்பாராத அவர் அதை தடுப்பதற்காக பேட்டை உள்ளே விட்டு மிகப்பெரிய எட்ஜ் கொடுத்தார். அதன் காரணமாக மிகவும் அகலமாக கிட்டத்தட்ட முதல் ஸ்லிப் ஃபீல்டர் நிற்கும் பகுதியை நோக்கி சென்ற பந்தை விக்கெட் கீப்பர் ப்ரப்சிம்ரன் சிங் சூப்பர்மேன் போல தாவி அபாரமான கேட்ச் பிடித்தது வர்ணனையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் பேட்ஸ்மேன் இடது பக்கம் அடிப்பார் என்று கருதிய அவர் சற்று இடது புறமாக நகர்ந்த போதிலும் சரியான நேரத்தில் மீண்டும் வலப்புறமாக நகர்ந்து பறவையைப் போல் தாவி டைவ் அடித்து அற்புதமான கேட்ச் பிடித்தார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். வெறும் 22 வயதாகும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் இதே போல விளையாடி வருவதுடன் கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஓரிரு போட்டிகளில் மட்டும் விளையாடும் வாய்ப்பு பெற்று வந்தார்.

இதையும் படிங்க:டெஸ்ட் தொடரை வென்றும் சரிவை சந்தித்துள்ள இந்திய அணி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் – இந்தியாவின் நிலை என்ன?

இருப்பினும் இந்த வருடம் முழுமையாக 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் மெதுவாகவும் கடைசியில் சரவெடியாகவும் விளையாடி சதமடித்து 103 (65) ரன்கள் குவித்து அசத்தலாக செயல்பட்டார். அதன் காரணமாக வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு விளையாட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement