வீடியோ : காற்றில் பறந்த மானம், சொந்த மண்ணில் அந்த வார்த்தையை கூச்சலிட்டு பாபர் அசாமை பகிரங்கமாக கலாய்த்த பாக் ரசிகர்கள்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய பாகிஸ்தான் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 2 – 0* (3) என்ற கணக்கில் பின்தங்கி ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. குறிப்பாக தார் ரோடு போல அமைந்த ராவல்பிண்டி மைதானத்தில் இங்கிலாந்திடம் சரமாரியாக அடி வாங்கி படுதோல்வியை சந்தித்த அந்த அணி டிசம்பர் 9ஆம் தேதியன்று முல்தானில் நடைபெற்ற 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 281 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பென் டன்கட் 63 ரன்களும் ஓலி போப் 60 ரன்களும் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்களும் சவுத் ஷாகீல் 63 ரன்களும் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 142/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் அவுட்டானதும் சீட்டு கட்டு போல மொத்தமாக சாய்ந்த அந்த அணியை 202 ரன்களுக்கு சுருட்டும் வகையில் பந்து வீச்சில் அசத்திய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஜிம்பாபார் அசாம்:
அதை தொடர்ந்து 79 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து ஹரி ப்ரூக் சதமடித்து 108 ரன்கள் குவித்த உதவியுடன் தன்னுடைய 2வது இன்னிங்ஸில் 275 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் சார்பில் மீண்டும் அப்ரார் அகமத் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 355 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு முகமது ரிஸ்வான் 30, அப்துல்லா ஷபிக் 45, இமாம்-உல்-ஹக் 60 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தாலும் அதை பெரிதாக மாற்றாமல் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக 94 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய ஷாகீல் அவுட்டான பின் இதர வீரர்கள் சொதப்பியதால் 328 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 22 வருடங்கள் கழித்து அந்நாட்டில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. முன்னதாக இப்போட்டியில் இங்கிலாந்து வழக்கம் போல அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடிய நிலையில் ஆரம்ப முதலே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாகிஸ்தானுக்கு முக்கியமான 2வது இன்னிங்ஸில் கேப்டன் பாபர் அசாம் வெறும் 1 ரன்னில் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

கடந்த 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியையும் மிஞ்சி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அவதரித்த அவர் பாகிஸ்தானின் வெற்றியில் இன்றியமையாத வீரராக வலம் வருகிறார். இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பைக்குப்பின் பார்மை இழந்த அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறுகிறார். மேலும் கேப்டனாகவும் முக்கிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் திண்டாடும் அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

அதை விட 2019 – 2021 வரையிலான காலகட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை, வங்கதேசம் போன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக அதிக ரன்களையும் சதங்களையும் அடித்து தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை எட்டியதாக அவர் மீது ஆதாரத்துடன் சமீப காலங்களாகவே ரசிகர்கள் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுகமெனில் சுமாராக செயல்படும் போதெல்லாம் நிறைய ரசிகர்கள் அவரை “ஜிம்பாபர்” என்று சமூகவலைதளஙகளில் கலாய்ப்பது வழக்கமாகும்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : 1 கோடி அடிப்படை விலைக்கு கூட ஏலம் போகமாட்டார்கள் என்று சொல்லக்கூடிய 5 வீரர்களின் பட்டியல்

ஆனால் இப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் 1 ரன்னில் அவுட்டான போது கடுப்பான பாகிஸ்தான் ரசிகர்கள் பெவிலியன் நோக்கி திரும்பிய அவரை “ஜிம்பாபர் ஜிம்பாபர்” என்றும் “கண்டே கா கிங்” அதாவது கத்துக்குட்டிகளை அடித்த கிங் என்றும் கூச்சலிட்டு தாறுமாறாக கலாய்த்தார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் என்ன தான் இருந்தாலும் நமது தேசத்தின் ஹீரோவை இப்படி நீங்களே விமர்சிக்கலாமா என்று முல்தான் ரசிகர்களை இதர பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

Advertisement