வீடியோ : ஒரே ஓவரில் 31 ரன்கள், மாஸ் சிக்ஸர்களால் ஹைதராபாத் கனவை அடித்து நொறுக்கிய ஸ்டோனிஸ் – பூரான்

Nicholas Pooran LSG vs SRH
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 13ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 58வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அபிஷேக் ஷர்மா ஆரம்பத்திலேயே 7 ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாட முயற்சித்து 4 பவுண்டரியுடன் 20 (13) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த மற்றொரு தொடக்க வீரர் அன்மோல்பிரீத் சிங் 7 பவுண்டரியுடன் 36 (27) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் மார்க்ரமை 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (20) ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்த போது அவுட்டாக்கிய க்ருனால் பாண்டியா கிளன் பிலிப்ஸை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் மிடில் ஓவர்களில் தடுமாறிய ஹைதராபாத்தை முக்கிய நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி ஓரளவு காப்பாற்றிய ஹென்றிச் க்ளாஸென் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (29) ரன்களில் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சரவெடி பூரான்:
இருப்பினும் அவருடன் 6வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அப்துல் சமத் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 37* (25) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் ஹைதராபாத் 182/6 ரன்கள் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக கேப்டன் க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் ஆரம்பத்திலேயே திணறலாக செயல்பட்டு வெறும் 2 (14) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்த போதிலும் மற்றொரு தொடக்க வீரர் குவிண்டன் டீ காக் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 29 (19) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் இளம் வீரர் பிரேரக் மன்கட் உடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் மார்கஸ் ஸ்டோனிஸ் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் அபிஷேக் சர்மா வீசிய 16வது வீசிய ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு 40 (25) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த அடுத்ததாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் செட்டிலாக நேரம் எடுத்துக்கொள்ளாமல் அபிஷேக் சர்மா வீசிய அதே ஓவரில் சந்தித்த கடைசி 3 பந்துகளிலும் ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டு போட்டியை தலைகீழாக மாற்றினார்.

- Advertisement -

அப்படி 31 ரன்களை விளாசிய ஹைதராபாத்துக்கு மறுபுறம் அசத்திய மன்கட் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64* (45) ரன்கள் எடுத்தார். இறுதியில் 3 பண்டரி மற்றும் 4 சிக்சர்களை தெறிக்க விட்டு 44* (13) ரன்கள் எடுத்த நிக்கோலஸ் பூரான் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவர்களில் 185/3 ரன்கள் எடுத்த லக்னோ 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தில் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட தவறியதால் க்ளாஸென் – அப்துல் சமத் ஆகியோர் போராடியும் ஹைதராபாத் 200 ரன்களை எடுக்க தவறியது முக்கிய பின்னடைவாக அமைந்தது.

அதே போல் பந்து வீச்சில் பவர் பிளே ஓவர்களில் மட்டுமே அசத்தலாக பந்து வீசிய அந்த அணி லக்னோவுக்கு அழுத்தத்தை கொடுத்தது. அதனால் கடைசி 8 ஓவர்களில் 108 ரன்கள் தேவைப்பட்ட போது அடித்து நொறுக்கிய ஸ்டோனிஸ், பூரான் ஆகியோர் ஹைதராபாத் கையில் வைத்திருந்த வெற்றியை பறித்தனர் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:MI vs GT : யார் இந்த விஷ்னு வினோத்? ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த வீரர் பற்றி உங்களுக்கு தெரியுமா? – ஓர் அலசல் இதோ

அதன் காரணமாக 12 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த லக்னோ 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் 11 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த ஹைதெராபாத் எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாலும் பிளே ஆஃப் சுற்றுச் செல்ல 20% மட்டுமே வாய்ப்புள்ளது அந்த அணி ரசிகர்களின் கனவை உடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement