MI vs GT : யார் இந்த விஷ்னு வினோத்? ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த வீரர் பற்றி உங்களுக்கு தெரியுமா? – ஓர் அலசல் இதோ

Vishnu-Vinod
- Advertisement -

நடைபெற்று முடிந்த 57-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. அதிலும் குறிப்பாக மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 218 ரன்கள் என்கிற பெரிய ரன் குவிப்பை எடுத்திருந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 88 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது சூரியகுமார் யாதவுடன் கைகோர்த்த விஷ்ணு வினோத் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பை அணியின் மிகப்பெரிய ஸ்கோருக்கு உதவி புரிந்தார்.

Vishnu Vinod 1

- Advertisement -

இந்த போட்டியில் 20 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 30 ரன்கள் அடித்து அசத்தினார். ஏற்கனவே மும்பை அணியில் விளையாடி வந்த திலக் வர்மா காயம் காரணமாக சமீபத்திய போட்டிகளில் விளையாடாத வேளையில் நேற்றைய போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விஷ்ணு வினோத் விளையாடி விதத்தை பார்த்து ரசிகர்கள் இவர் யார்? என்ற தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் குறித்த தகவல் தற்போது நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வகையில் : கேரளாவை சேர்ந்த துவக்க வீரரான விஷ்ணு வினோத் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக அறிமுகமாகிய அவர் அந்த போட்டியில் பெரிய அளவில் ரன்களை சேர்க்காததால் அவர் மீது ரசிகர்களின் பார்வை படவில்லை.

Vishnu Vinod 2

அதோடு தனக்கு கிடைத்த வெகு சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாததால் அவரை ஆர்சிபி அணி கழற்றிவிட்டது. அதேபோன்று அதனை தொடர்ந்து சில சீசன்களில் அவரை எந்த அணியும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்ப வேண்டும் என்பதால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியான கவனத்தை செலுத்தி வந்த விஷ்ணு வினோத் அதிரடியாக விளையாடி மும்பை அணியின் கவனத்தை ஈர்த்து இருந்தார். அதனை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்ட விஷ்ணு வினோத்தை 20 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு மும்பை அணியின் நிர்வாகம் வாங்கியிருந்தது.

இதையும் படிங்க : வீடியோ : நோ-பால் கொடுக்க முடியாது முடிஞ்சத பாருங்க – அநியாயம் செய்த அம்பயர், கொந்தளித்த வீரர்கள் ரசிகர்கள் – நடந்தது என்ன

பயிற்சி போட்டிகளில் அவரது திறமையை உணர்ந்த மும்பை அணியின் நிர்வாகமும் இந்த சீசனில் அவருக்கு ஒரு வாய்ப்பை நேற்றைய போட்டியில் வழங்கியது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய விஷ்ணு வினோத் 30 ரன்கள் அடித்து தற்போது ரசிகர்கள் மத்தியிலும் தேடப்படும் ஒரு வீரராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement