வீடியோ : ரசிகர்களை வரவேற்க சேப்பாக்கம் மைதானத்தில் பெயிண்டராக மாறிய தல தோனி

MS-Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து மிகச் சிறந்த கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் எம்எஸ் தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது 41 வயதை கடந்து விட்ட அவர் சமீப காலங்களாகவே பேட்டிங்கில் தடுமாறி வருவதால் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 4 கோப்பைகளை வென்று சென்னையை 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்துள்ள அவரை தமிழக ரசிகர்கள் ஆரம்பகாலம் முதலே தல என்ற செல்லப் பெயருடன் தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். அதனால் ராஞ்சிக்கு பின் சென்னை தன்னுடைய 2வது வீடு என்று பல முறை தெரிவித்துள்ள தோனி தனது கேரியரின் கடைசி போட்டி தமிழக மண்ணில் தான் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அந்த நிலையில் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணி இந்த வருடம் களமிறங்குகிறது.

- Advertisement -

பெயிண்டர் தோனி:
அதன் காரணமாக இந்த வாய்ப்பில் சரியான தருணத்தில் ஐபிஎல் தொடரிலிருந்தும் தோனி விடை பெறுவார் என்று எதிர்பார்ப்புகளும் செய்திகளும் காணப்படுகிறது. அதற்கேற்றார் போல் நீண்ட நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருந்த ஐ, ஜே, கே ஸ்டேண்ட் சம்பந்தமாக நிலவிய பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்து புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளன. அதனால் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 40,000 இடங்களையும் நிரப்பி தோனியை கொண்டாடுவதற்காக தமிழக ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக ரசிகர்களை வரவேற்பதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் நாற்காலிகள் உட்பட அனைத்தும் புது பொலிவுடன் புதுமைப் படுத்தப்பட்டு வருகிறது. அதில் பயிற்சி செய்தது போக எஞ்சிய நேரத்தில் ஜாலியாக மைதானத்தில் இருக்கும் இருக்கைகளில் வர்ணம் பூசும் வேலைகளில் தோனி ஈடுபட்டார். குறிப்பாக மஞ்சள் நிற இருக்கையில் மஞ்சள் நிறத்தை அடித்த அவர் இது கண்டிப்பாக எல்லோவாக தெரிகிறது என்று புன்னகை முகத்துடன் தெரிவித்தார். அத்துடன் நீல நிற இருக்கைகளிலும் அந்த நிறத்தை தோனி அடித்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

- Advertisement -

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி தலைமையிலான சென்னை அணி பயிற்சிகளை முடித்துக் கொண்டு மார்ச் 31ஆம் தேதி தனது முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்வதற்காக அகமதாபாத் நகருக்கு செல்லவிருக்கிறது. அதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 3ஆம் தேதி லக்னோ அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கேப்டன்ஷிப் குளறுபடிகள் மற்றும் ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் அதிக தோல்வியை சந்தித்த சென்னை புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இதையும் படிங்க: வீடியோ : என்னா மனுஷன்யா, சின்ன குழந்தையை காப்பாற்றுவதற்காக தன்னையே காயப்படுத்திக்கொண்ட வெ.இ கேப்டன்

எனவே இம்முறை அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 5வது கோப்பையை வென்று கம்பேக் கொடுக்கும் லட்சியத்துடன் சென்னை விளையாட உள்ளது. இம்முறை ரவீந்திர ஜடேஜா நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் பென்ஸ் ஸ்டோக்ஸ் முதல் முறையாக விளையாட உள்ளது சென்னை அணிக்கு வலு சேர்க்கிறது. அதனால் இம்முறை சென்னை வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் விடை பெற போராடுவார்களா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement