ப்ராவோ அம்மாவுக்கு வாழ்த்து சொல்லி பரிசு கேட்ட தல தோனி – கலாய்த்த ரெய்னா, கூட்டாக வாழ்த்திய சிஎஸ்கே ஃபேமிலி

Dwayne Bravo CSK
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று தமிழகத்தின் தலைநகர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 217 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ருதுராஜ் கைக்வாட் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 57 (31) ரன்களும் டேவோன் கான்வே 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 (29) ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் சிவம் துபே 27 (16), மொய்ன் அலி 19 (13), ராயுடு 27* (14), கேப்டன் தோனி 12 (3) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் முக்கிய ரன்களை அதிரடியாக எடுத்தனர். லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 218 ரன்களை துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (22) ரன்கள் விளாசி சென்னைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார்.

- Advertisement -

தோனியின் வாழ்த்து:
ஆனால் அவரை பவர் பிளே முடிவில் அவுட்டாக்கிய மொய்ன் அலி கேஎல் ராகுல் 20, க்ருனால் பாண்டியா 9, மார்கஸ் ஸ்டோனிஸ் 21 என இதர முக்கிய பேட்ஸ்மேன்களையும் சொற்ப ரன்களில் காலி செய்தார். அதனால் நிக்கோலஸ் பூரான் 32, ஆயுஷ் படோனி 23 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 205/7 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ போராடி தோற்றது. மறுபுறம் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் தங்களுக்கு மஞ்சள் உடை அணிந்து வந்து ஆதரவு கொடுத்த ஏராளமான ரசிகர்களுக்கு சென்னை அணி சிறப்பான வெற்றியை பரிசாக்கியது.

முன்னதாக சென்னை அணிக்காக நீண்ட வருடங்களாக விளையாடி ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்த ட்வயன் ப்ராவோ வயது காரணமாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றார். இருப்பினும் சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவருடைய அம்மா வெஸ்ட் இண்டீஸில் தன்னுடைய 65வது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த நிலையில் சென்னை வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த தோனியிடம் தம்முடைய அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுமாறு ட்வயன் பிராவோ கோரிக்கை வைத்தார்.

- Advertisement -

அதற்கு சிரித்த முகத்துடன் அம்மாவுக்கு 65வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தோனி பிறந்தநாள் பரிசாக கேக்கை அனுப்புமாறும் அதை ட்வயன் பிராவோ முகத்தில் பூச வேண்டும் என்றும் ஜாலியான கோரிக்கை வைத்தார். அதே போல அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த சின்னத்தல சுரேஷ் ரெய்னா “ப்ராவோ இங்கே அதிக மாம்பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அதனால் அவருடைய வயிறு சரியில்லை” என்று சொல்லி கலாய்த்தார்.

இறுதியாக அம்பத்தி ராயுடு ராபின் உத்தப்பா, எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சென்னையின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் தங்களது தோள் மீது தோள் போட்டு ஒன்றாக ப்ராவோ அவர்களுடைய அம்மாவுக்கு 65ஆவது பிறந்தநாளை சிரித்த முகத்துடன் பாட்டு பாடிக்கொண்டே வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிராவோ நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க:IPL 2023 : 16 வருட ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்து வரலாறு படைத்த – கைல் மேயர்ஸ்

“இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய அம்மா அவர்களுடைய பிறந்தநாள் பரிசாக விரும்புகிறார். அந்த வகையில் இன்றைய போட்டியில் வென்றது அவருடைய பிறந்தநாளின் சிறந்த பரிசாகும். இன்றைய நாளில் சிறந்த வெற்றியை பதிவு செய்த என்னுடைய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது என்னுடைய சாம்பியன் அம்மாவுக்கு 65வது பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எனக்கு உதவுங்கள். அவருக்கு அவருடைய சாம்பியன் மகன் மற்றும் ஒட்டுமொத்த சென்னை அணியின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement