IPL 2023 : 16 வருட ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்து வரலாறு படைத்த – கைல் மேயர்ஸ்

Kyle-Mayers
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 31-ம் தேதி துவங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆறாவது லீக் போட்டியானது நேற்று முதல் முறையாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

Kyle Mayers 2

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கே.எல் ராகுல் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது லக்னோ அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 217 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய லக்னோ அணியானது 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியிடம் தோல்வியை சந்தித்தது.

Kyle Mayers 1

இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 53 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் அடித்த இந்த அரைசதம் மூலம் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் படைக்காத சாதனையை படைத்து வரலாற்றில் தனது பெயரை பதிய வைத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை எந்த ஒரு ஐபிஎல் வீரரும் தாங்கள் அறிமுகமான முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்ததே இல்லை. அந்த சாதனையை தகர்த்துள்ள கைல் மேயர்ஸ் தற்போது ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : ரெய்னா தான் என்னோட இன்ஷ்பைரேசன், நீங்க நினைக்கிற மாதிரி நான் அதுக்காக செல்பிஷா விளையாடல – ருதுராஜ் பேட்டி

ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான தனது அறிமுக ஐ.பி.எல் போட்டியில் 73 ரன்கள் விளாசியிருந்த அவர் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியிலும் 53 ரன்கள் அடித்தார். இப்படி ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement