வீடியோ : கேட்கல இன்னும் சத்தமா? ஸ்லெட்ஜிங் போரில் லிட்டன் தாஸை மிரட்டிய சிராஜ் – சூடேற்றிய விராட் கோலி

Liton Das Siraj
Advertisement

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ராகுல் தலைமையில் டிசம்பர் 14ஆம் தேதியன்று சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 404 ரன்கள் குவித்து அசத்தியது. கேப்டன் கேஎல் ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 48/3 என தடுமாறிய இந்தியாவை மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் 46, புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86 என முக்கிய முக்கிய வீரர்கள் பொறுப்பான ரன்களை குவித்தி மீட்டெடுத்தார்கள்.

Shreyas-Iyer-1

கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் அற்புதமாக செயல்பட்டு 58 ரன்களும் குல்தீப் யாதவ் 40 ரன்களும் குவித்து இந்தியாவை மேலும் வலுப்படுத்திய நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் மற்றும் மெகதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அதைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை துவங்கிய வங்கதேசம் முதல் பந்திலிருந்தே தரமாக பந்து வீசிய இந்திய பவுலர்களிடம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

- Advertisement -

ஸ்லெட்ஜிங் போர்:

குறிப்பாக சாண்டோ 0, ஜாகிர் ஹசன் 20, யாசிர் அலி 4, லிட்டன் தாஸ் 24, சாகிப் அல் ஹசன் 3, முஷ்பிகர் ரஹீம் 28 என முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் வேகம் மற்றும் சுழலில் சீரான இடைவெளியில் அவுட்டானதால் 2வது நாள் முடிவில் 133/8 என்ற நிலையில் உள்ள வங்கதேசம் 271 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட் எடுத்துள்ளனர். முன்னதாக இப்போட்டியில் முதல் பந்திலேயே சான்டோவை கோல்டன் டக் அவுட்டாக்கிய வேகத்தில் மேலும் மிரட்டலாக பந்து வீசிய முகமது சிராஜ் 14வது ஓரின் முதல் பந்தில் நட்சத்திர வங்கதேச வீரர் லிட்டன் தாஸை காலி செய்ய முயற்சித்தார்.

Siraj ashwin

ஆனால் அவர் அதை லாவமாக தடுத்த நிலையில் எப்படியாவது அவுட்டாக்கும் முனைப்பில் ஸ்லெட்ஜிங் அஸ்திரத்தை கையில் எடுத்த முகமது சிராஜ் அவரது அருகே சென்று சில வார்த்தைகளை பேசினார். அதற்கு “என்ன சொன்னீங்க கேட்கல, கேட்கல, சத்தமா சொல்லுங்க” என்ற வகையில் லிட்டன் தாஸ் தக்க பதிலடி கொடுத்ததால் ஏற்பட்ட பரபரப்பில் இருவருக்கும் நடுவே அம்பயர் புகுந்து சமாதானப்படுத்தினார். ஆனால் அடுத்த பந்திலேயே இன்னும் சூடான வேகத்தில் பந்து வீசிய முகமது சிராஜிடம் எட்ஜ் வாங்கிய லிட்டன் தாஸ் கிளீன் போல்ட்டாகி சென்றார்.

- Advertisement -

குறிப்பாக ஸ்லெட்ஜிங் செய்ததால் கவனத்தை இழந்த அவர் குறைந்த உயரத்தில் பவுன்ஸாகி வந்த பந்தை குனிந்து டிஃபன்ட் செய்யாமல் விட்டதால் பேட்டில் பட்ட பந்து ஸ்டம்ப்பில் அடித்து விக்கெட்டை காலி செய்தது. அதனால் வாயில் மட்டும் பேசாமல் பந்திலும் ஜாலம் நிகழ்த்திய முகமது சிராஜ் “வாயை மூடிக் கொண்டு போங்கள்” என்ற வகையில் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் சைகை செய்து விக்கெட்டை கொண்டாடினார். அப்போது ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலி “எங்களைப் பார்த்து என்ன சொன்னீர்கள்” என்ற வகையில் காதில் கையை வைத்து வங்கதேச ரசிகர்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி தன்னுடைய பதிலடியை கொடுத்தார்.

இதையும் படிங்க: விராட் கோலிக்கு அப்றம் அவர் தான் கிங், ஆனால் பெரிய பெயர் இல்லாததால் ட்ராப் பண்ணிட்டாங்க – முகமத் கைப் அதிருப்தி

மறுபுறம் ஸ்லெட்ஜிங் போரில் கவனத்தை இழந்த லிட்டன் தாஸ் பேச முடியாமல் 24 ரன்களில் அவுட்டாகி சென்றார். பொதுவாக ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட் எடுப்பது ஆஸ்திரேலியர்களுக்கு கை வந்த கலை என்பார்கள். அதைக் கச்சிதமாக செய்த முகமது சிராஜ் இதுவரை 4 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை இப்போட்டியில் முன்னிலைப்படுத்தியுள்ளார். சமீப காலங்களாகவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திர பவுலராக தன்னை அடையாளப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement