IND vs ZIM : போட்டிக்கு முன்பு தேசப்பற்றை வெளிப்படுத்திய ராகுல் – ரசிகர்கள் பாராட்டும் 2 வைரல் வீடியோ உள்ளே

Rahul
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. தலைநகர் ஹராரேயில் ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று துவங்கிய துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே இந்தியாவின் அற்புதமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 40.3 ஓவரில் வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது. சிகந்தர் ராசா, இன்னசென்ட் கயா போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சகப்வா 35 ரன்களும், ங்கரவா 34 ரன்களும், எவன்ஸ் 33* ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் 190 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி சுமாராக பந்துவீசிய ஜிம்பாப்வே பவுலர்களை அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 9 பவுண்டரிகளுடன் 81* (113) ரன்களும் சுப்மன் கில் 82* (72) ரன்களும் விளாசி 30.5 ஓவரில் 192/0 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்கு காயத்திலிருந்து திரும்பி அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் எடுத்த தீபக் சஹர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ராகுல் நிம்மதி:
அவரைப் போல இந்த தொடருக்கு முன்பாக காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பியதால் கடைசி நேரத்தில் ஷிகர் தவானை அவமானப்படுத்தும் வகையில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் இப்போட்டியில் பொறுப்புடன் தனது ஓப்பனிங் இடத்தை சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடர் நாயகன் விருது வென்று நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு விட்டுக் கொடுத்தது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. அதனால் இப்போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத அவர் கேப்டனாக தனது முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்துள்ளார்.

ஆம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு ப்ளே ஆப் சுற்றுக்கு கூட அழைத்து செல்லாத போதிலும் 35 வயதை கடந்த ரோகித் சர்மாவுக்கு பின் அடுத்த தலைமுறை கேப்டனை உருவாக்கும் வகையில் கடந்த ஜனவரியில் முதல் முறையாக இவர் இந்தியாவின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் விராட் கோலி காயத்தால் வெளியேறியபோது முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட இவரது தலைமையில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரசிகர்கள் ஆவல்:
அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் முழுமையாக கேப்டன்ஷிப் செய்த அவர் சுமாராக செயல்பட்டதால் 3 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்காவிடம் மண்டியிட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. அப்படி இதுவரை கேப்டன்ஷிப் செய்த 4 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்த அவர் ஒரு வழியாக தமக்கு மிகவும் பிடித்த ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

ஏனெனில் கடந்த 2016இல் ஒருநாள் கிரிக்கெட்டில் இதே ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகமாகி சதமடித்த அவர் இன்று நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். அப்படிப்பட்ட அவரின் பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காக நேற்றைய போட்டியில் ஆரம்பத்திலேயே தீபக் சஹர் வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தபோது “சஹார் விக்கெட்களை எடுக்காதீர்கள், நாங்கள் ராகுலின் பேட்டிங்கை பார்க்க வந்துள்ளோம்” என்று மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

தேசப்பற்று:
அதைவிட இந்த போட்டிக்கு முன்பாக இரு நாடுகளின் தேசிய கீதமும் மைதானத்தில் இசைக்கப்பட்டது. அப்போது களத்தில் விளையாடுவதற்காக தயாராகி வந்த கேஎல் ராகுல் தனது வாயில் சுயிங்கம் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் தேசிய கீதம் இசைப்பதற்கு ஒருசில வினாடிகள் முன்பாக அதற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் அவசர அவசரமாக அதை வாயிலிருந்து வெளியே எடுத்த அவர் மிடுக்குடன் நேராக நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தி தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : தோனி கூடவே வரமாட்டார், உங்களை நீங்களே தான் காப்பாத்திகனும் – இளம்வீரரை எச்சரித்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

அதை பார்த்த ரசிகர்கள் என்ன மனுசன்யா கேப்டனுக்கு அடையாளமாக இந்தியருக்கு சான்றாக தேசிய கீதத்துக்கு மதிப்பு கொடுக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இத்தொடரின் 2-வது போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியான நாளை மதியம் 12.45 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement