சொந்த மகனை போல கட்டிப்பிடித்து பாசத்தை காட்டிய அன்பு, வெ.இ வீரர் அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய கிங் கோலி – ரசிகர்கள் நெகிழ்ச்சி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இருப்பினும் சுமாராக பந்து வீசிய அந்த அணியை ஆரம்பம் முதலே நிதானமாக எதிர்கொண்ட இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக 139 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும் ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுக்க சுப்மன் கில் 10 ரன்களிலும் ரகானே 8 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். அவருடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரவீந்திர ஜடேஜா அரை சதமடித்து 61 ரன்களும் ரவிச்சந்திரன் 57 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

அம்மாவின் பாசம்:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன், கிமர் ரோச் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தக்நரேன் சந்தர்பால் 33 ரன்களில் ஜடேஜா சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 37* ரன்களும் மெக்கென்சி 14* ரன்களும் எடுத்து நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்திய போது நிறைவுக்கு வந்த 2வது நாள் முடிவில் 86/1 ரன்கள் எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 352 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முன்னதாக தன்னுடைய 500வது சர்வதேச போட்டியாக அமைந்த இப்போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலியை வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஸ்வா டா சில்வா ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பதில் ரசிகனாக மாறி சீக்கிரமாக சதமடியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக தம்முடைய அம்மா தாம் விளையாடுவதை பார்ப்பதற்கு பதிலாக நீங்கள் சதமடிப்பதை பார்க்க விரும்புவதாக தெரிவித்து அவர் ஸ்டம்ப் மைக்கில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய அம்மா இந்த போட்டியில் என்னை பார்க்க வராமல் விராட்டை பார்க்க வருவதாக போனில் தெரிவித்தார். அப்படி என்னுடைய அம்மா கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. அதற்காக அவரை நான் குற்றம் சொல்லவில்லை. தற்போது அவர் இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறிய போது விராட் கோலி சிரித்த முகத்துடன் ரியாக்சன் கொடுத்தார். அந்த நிலையில் இந்த போட்டியின் 2வது நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு திரும்புவதற்காக விராட் கோலி இந்திய அணியின் பேருந்தில் ஏறினார்.

அப்போது ஜோஸ்வா டா சில்வா அவர்களின் அம்மா அங்கே தம்மை பார்ப்பதற்காக காத்திருப்பதை அறிந்த விராட் கோலி உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி அவரை நேரில் சந்தித்தார். அப்படி தம்மை காண்பதற்காக வந்த விராட் கோலியை நேரடியாக சென்று தன்னுடைய மகனைப் போல கட்டிப்பிடித்த அந்த அம்மா வியப்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார். அத்துடன் விராட் கோலியின் கைகளை பிடித்து “நீங்கள் மிகவும் அற்புதமானவர். உங்களுக்கு மனைவி அழகானவர்” என்று சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

- Advertisement -

அந்த பாசத்தை ஏற்றுக்கொண்டு நெகிழ்ச்சியடைந்த விராட் கோலி இறுதியாக அவருடன் புகைப்படம் எடுத்து அன்பை வெளிப்படுத்தினார். பிரபல இந்திய செய்தியாளர் விமல் குமார் அவர்கள் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் விராட் கோலியை பார்த்தது பற்றி ஜோஸ்வாவின் அம்மா ஆனந்த கண்ணீருடன் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:வீடியோ : சொந்த மகனை போல கட்டிப்பிடித்து பாசத்தை காட்டிய அன்பு, வெ.இ வீரர் அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய கிங் கோலி – ரசிகர்கள் நெகிழ்ச்சி

“நான் ஜோஸ்வாவிடம் இந்த போட்டியை விராட் கோலியை பார்ப்பதற்காகவே வருகிறேன் உனக்காக அல்ல என்று கூறினேன். ஏனெனில் நான் என்னுடைய மகனை தினந்தோறும் பார்த்து வருகிறேன். அந்த வகையில் முதல் முறையாக விராட் கோலியை பார்த்த போது அவர் மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் மனிதாபிமானமிக்கவராகவும் இருந்தார். மேலும் நல்ல திறமையை கொண்ட அவரைப் போலவே என்னுடைய மகனும் அசத்துவார்” என்று நம்புகிறேன் என கூறினார்.

Advertisement