ரன் அவுட்டான கோபத்தில் பேட்டை நொறுக்கி கண்ணீர் விட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் – ரசிகர்களிடம் மன்னிப்பு

Harmanpreet Kaur
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2023 மகளிர் டி20 உலக கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோற்றாலும் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை வரலாற்றில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாத இந்தியா முதல் முறையாக கடந்த மாதம் இதே தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் அண்டர்-19 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்த புத்துணர்ச்சியுடன் இத்தொடரிலும் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் வழக்கம் போல அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்த இந்தியா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து மீண்டும் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. பிப்ரவரி 23ஆம் தேதியன்று நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 172/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பெத் மூனி 54 (37) கேப்டன் மெக் லென்னிங் 49* (34) ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 173 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா 2, சஃபாலி வர்மா 9, யாஸ்திகா பாட்டியா 4 என முக்கிய டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 28/3 என சரிந்த இந்தியாவை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருடன் இணைந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஜெமிமா ரோட்ரிகஸ் 43 (24) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் அரைசதம் கடந்ததால் வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியாவுக்கு 32 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஹர்மன்ப்ரீத் கண்ணீர்:
அப்போது பவுண்டரி அடிக்க முயற்சித்து 2 ரன்கள் எடுக்க ஓடிய அவர் 2வது ரன் எடுக்கும் போது பந்து மெதுவாக வருவாக நினைத்து சற்று அஜாகிரதையாக செயல்பட்டார். அதை பயன்படுத்திய ஆஸ்திரேலியா ரன் அவுட் செய்து நடுவரிடம் அவுட் கேட்டது. அதை பெரிய திரையில் பார்க்கும் போது முக்கிய நேரத்தில் ஹர்மன்ப்ரீத் வெள்ளை கோட்டுக்கு உள்ளே சென்ற போதிலும் அவருடைய பேட் மற்றும் உடல் பாகங்கள் வெள்ளைக்கோட்டை தொடாத காரணத்தால் நடுவர் அவுட்டென அறிவித்தார்.

- Advertisement -

அதனால் 52 (34) ரன்களில் அவுட்டான அவருக்கு பின் வழக்கம் போல சொதப்பிய இந்தியா 20 ஓவரில் 167/8 ரன்கள் மட்டும் எடுத்து பரிதாபமாக தோற்றது. மொத்தத்தில் தன்னுடைய ரன் அவுட் இந்தியாவின் உலகக்கோப்பை கனவை மீண்டும் தகர்த்ததை அவுட்டாகும் போதே உணர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பெவிலியனுக்கு செல்லும் போது கோபத்தில் தனது பேட்டை மைதானத்தில் அடித்து நொறுக்காத குறையாக வீசி எறிந்து மீண்டும் கையிலெடுத்துக் கொண்டு பெவிலியன் திரும்பும் வரை கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே சென்றார்.

அவரது ரன் அவுட் 2019 உலக கோப்பையில் தோனி அவுட்டானதை போலவே இருப்பதை நினைத்து ரசிகர்கள் மேலும் வேதனையடைகிறார்கள். அதை விட போட்டி முடிந்த பின் அவரை சந்தித்த முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆறுதல் தெரிவித்தார். அப்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஹர்மன்ப்ரீத் கௌர் அவரது தோள் மீது சாய்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். அதே போல போட்டி முடிந்த பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தாம் அழுவதை ரசிகர்கள் பார்க்க கூடாது என்பதற்காக கண்ணாடி அணிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் அடுத்த முறை இந்த தவறு நடக்காது என்று உறுதியளித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எனது தேசம் நான் அழுவதை பார்க்க விரும்பவில்லை. அதனால் இந்த கண்ணாடிகளை நான் அணிந்து கொண்டுள்ளேன். வருங்காலங்களில் தேவையான முன்னேற்றத்தைக் கண்டு எங்களது நாட்டை இப்போது போல கீழே விடமாட்டோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.

இதை படிங்க:2019 வலி ரிப்பீட்டு, வெற்றியை பறித்த ரன் அவுட் – சேவாக் முதல் ரசிகர்கள் வரை மொத்த இந்தியாவின் ஆதங்க ரியாக்சங்கள்

அப்படி கேப்டனாக முன்னின்று வெற்றிக்கு போராடினாலும் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானதால் கோபத்தை வெளிப்படுத்தி கண்ணீர் விட்டு இனிமேல் இந்த தவறு நடக்காது என்று மன்னிப்பு கேட்காத குறையாக பேசிய ஹர்மன்ப்ரீத் கௌருக்கு தலை வணங்கும் இந்திய ரசிகர்கள் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பதால் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் விடுங்கள் என்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement