பாவம் ரத்தம் வருது – இந்தியா, ஜிம்பாப்வே மீதான மொத்த கோபத்தை நெதர்லாந்து வீரர் மீது காட்டிய பாக் பவுலர்

Bas De Leede PAk vs NED
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 30ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு துவங்கிய 29வது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் வலுவான அணியாக இருந்தும் தன்னுடைய முதல் போட்டியில் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டு 2வது போட்டியில் கத்துக்குட்டி ஜிம்பாப்வேவிடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் அவமான தோல்வியை சந்தித்து விமர்சனத்திற்கும் கிண்டல்களுக்கும் உள்ளான பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அதே நிலைமையில் தனது முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நெதர்லாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து உலகிலேயே அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை இயற்கையாகவே கொண்ட பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங்கை துவக்கிய நெதர்லாந்துக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் முதலிரண்டு போட்டியில் தோற்ற கோபத்தில் இரு மடங்கு வெறியுடன் அதிரடியான வேகத்தில் பந்து வீசினார்கள். அதற்கு பதில் சொல்ல முடியாத ஸ்டீபன் மைபர்க் 6 (11) ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஸ் டீ லீடி பாகிஸ்தான் பவுலர்களை சமாளிப்பதற்காக பொறுமையுடன் பேட்டிங் செய்தார்.

- Advertisement -

ரத்தம் வந்துருச்சு:
அப்போது 5வது ஓவரை வீசிய ஹாரீஸ் ரவூப் 5வது பந்தை ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்ஸ் ஆகிய இரண்டு ஆயுதத்தையும் கலந்து அதிரடியான வேகத்தில் வீசினார். சாதாரணமாகவே வேகத்துக்கு கை கொடுக்கும் பெர்த் மைதானத்தில் அதிகமாக எகிறிய அந்த பந்து நேராக பஸ் டீ லீடியின் தலையில் குறிப்பாக மூக்கு பக்கம் பட்டது. ஆனால் பாதுகாப்புக்கு ஹெல்மெட் இருந்தும் அதிரடியான வேகத்தில் வந்த அந்த பந்து அவருடைய தலையில் வலுவாக அடித்தது. அதனால் உடனடியாக வலியை உணர்ந்து ஹெல்மெட்டை கழற்றிய அவர் மைதானத்திலேயே உட்கார்ந்த நிலையில் என்ன ஆயிற்று என்று பாகிஸ்தான் வீரர்கள் உட்பட அனைவரும் பதட்டத்துடன் ஓடி வந்து அவரை கவனித்தார்கள்.

அப்போது ஹெல்மெட் இருந்ததால் பந்து நேரடியாக அவரது முகத்தில் படாத போதிலும் பந்து பட்ட வேகத்தில் ஹெல்மெட்டில் இருந்த பாதுகாப்பு கம்பிகள் அவருடைய இடது கண்ணுக்கு கீழே ஆழமாக அடித்தது தெரிய வந்தது. அதனால் உடனடியாக மருத்துவர்கள் மைதானத்திற்குள் நுழைந்து அவரை சோதித்து தேவையான முதலுதவிகளை அளித்தனர். ஆனால் அதற்கு கட்டுப்படாத காயத்திலிருந்து ரத்தம் வழிந்ததால் உடனடியாக அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதிலும் வழிந்த ரத்தத்தை துண்டை வைத்து துடைத்துக் கொண்டே அவர் பரிதாபமாக வெளியேறியது பார்த்த ரசிகர்களை பதை பதைக்க வைத்தது. அதனால் அவருக்கு காயம் பெரிதாக இருக்கக் கூடாது என்றும் சீக்கிரம் குணமடைந்து விட வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வேண்டிக்கொள்கிறார்கள். அத்துடன் மேற்கொண்டு அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் விதிமுறைப்படி அவருக்கு பதிலாக லோகன் வன் பீக் நெதர்லாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத நெதர்லாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 91/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அக்கர்மேன் 27 (27) ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக சடாப் கான் 3 விக்கெட்டுகளையும் முகமது வாசிம் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 92 ரன்களை பாகிஸ்தான் துரத்தி வருகிறது.

Advertisement