வீடியோ : ஸ்லெட்ஜிங் செய்து வெறித்தனமாக கொண்டாடுவதை கலாய்த்த அனுஷ்கா – விராட் கோலியின் க்யூட்டான பதில் இதோ

Anushka Sharma
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் உலக அளவில் மகத்தான வீரராக செயல்பட்டு ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி கடந்த 15 வருடங்களில் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ளார். அதே போல ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

அப்படி இந்திய அளவில் உச்சகட்ட நட்சத்திரமாக இருக்கும் அவர் பாலிவுட் திரையுலகில் மற்றொரு நட்சத்திரமாக இருக்கும் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு வாமிகா எனும் அழகான மகள் இருப்பதை அனைவரும் அறிவோம். பொதுவாக ஒவ்வொரு ஆண்கள் வெற்றிலும் ஒரு பெண் பின்புலத்தில் இருப்பார் என்று வழக்கமாக சொல்லப்படும் வார்த்தைகளுக்கு சாட்சியாக 2019க்குப்பின் சதமடிக்காமல் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்த போது மனதளவில் தமது மனைவி அனுஷ்கா தான் பெரிய அளவில் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்ததாக விராட் கோலி தெரிவித்திருந்தார்.

- Advertisement -

கலாய்த்த அனுஷ்கா:
இந்நிலையில் பிரபல நிறுவனத்தின் தனியார் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட அந்த ஜோடி எந்தளவுக்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் “நீங்களும் விராட் கோலியும் எந்த மாதிரியான புரிதலைக் கொண்டுள்ளீர்கள்” என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு “பதி பரமேஸ்வர்” என்று அனுஷ்கா பதிலளித்தது அங்கிருந்த ரசிகர்களை ஆரவாரப்படுத்தியது.

அத்துடன் களத்தில் நீங்கள் விளையாடினால் விராட் கோலி எவ்வாறு ஸ்லெட்ஜிங் செய்வீர்கள் என்பதை செய்து காட்டுமாறு அனுஷ்காவிடம் தொகுப்பாளர் கேட்டுக்கொண்டார். அதற்கு “கமான் கமான் விராட். இன்று ஏப்ரல் 24. கொஞ்சமாவது ரன் அடியுங்கள்” என்று சொன்ன சொன்ன அவர் விராட் கோலியை கலாய்த்து ஸ்லெட்ஜிங் செய்து மகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்துக் கொண்டார். அதாவது ஐபிஎல் தொடரில் இந்த சீசன் மட்டுமல்லாமல் கடந்த 3 சீசன்களாக ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளில் விராட் கோலி தொடர்ந்து டக் அவுட்டாகியுள்ளார்.

- Advertisement -

அதை சுட்டிக்காட்டி தமது மனைவி கலாய்த்ததை கிடைத்து விராட் கோலியும் சிரித்தது அரங்கத்தை மீண்டும் அதிர விட்டது. அப்போது தொடர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த அவரை “கொஞ்சம் கம்பேக் கொடுக்க விடு” என்று சொன்ன விராட் கோலி “ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகியவற்றில் உன்னுடைய அனைத்து அணியும் சேர்த்து விளையாடிய போட்டிகளை விட நான் அதிக ரன்கள் அடித்துள்ளேன்” என்று அனுஷ்காவுக்கு மாஸ் பதிலடி கொடுத்தார். அதனால் வியப்பில் ஆழ்ந்த அனுஷ்கா இப்போதிலிருந்து நான் உங்களுடைய அணி என்று மீண்டும் விராட் கோலியை கட்டிப்பிடித்துக் கொண்டார்.

அத்துடன் பொதுவாகவே களத்தில் வெற்றிக்காக வெறித்தனமாக விளையாடும் விராட் கோலி ஒவ்வொரு டிக்கெட் விழுந்த போதும் அதை ஆக்ரோசமாக கொண்டாடுவது உலகப் புகழ்பெற்றது. அதை செய்து காட்டுமாறு தொகுப்பாளர் கேட்டுக் கொண்ட போது வாயை திறந்து கொண்டே அதே போல வேகமாக ஓடி கொண்டாடும் வகையில் விராட் கோலியை நேரடியாக அனுஷ்கா மீண்டும் கலாய்த்தார். அதை விராட் கோலி ரசித்த நிலையில் “சில நேரங்களில் பவுலர்களை விட இவர் வெறித்தனமாக விக்கெட்டை கொண்டாடுவார்” என்று மீண்டும் அனுஷ்கா கலாய்த்தார்.

இதையும் படிங்க:GT vs MI : ஐ.பி.எல் போட்டிகளில் ரிஷப் பண்டின் சாதனையை காலி செய்த சுப்மன் கில் – விவரம் இதோ

அதற்கு “அது போன்ற உணர்வுகள் போட்டியின் சூழ்நிலையை பொறுத்து தாமாக வரக்கூடியது” என்று விராட் கோலி பதிலளித்தார். மேலும் உங்களுடைய சிறந்த இன்னிங்ஸ் எது என்று தொகுப்பாளர் கேட்டதற்கு கடைசியாக விளையாடிய போட்டி என்று விராட் கோலி பதிலளித்தார். அப்படி கணவனும் மனைவியும் மனம் திறந்து ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement