குல்தீப் சென்னுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – 45 வருடங்கள் கழித்து அரிதான பரிதாப சாதனை படைத்த வங்கதேச வீரர்

Hit Wicket
- Advertisement -

வங்கதேசத்துக்கு பயணித்துள்ள இந்தியா அங்கு 3 ஒருநாள் மட்டும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. அதில் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்று தாக்காவில் நடைபெற்றது. இருப்பினும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த அந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட வங்கதேச பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோஹித் சர்மா 27, விராட் கோலி 9 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான இந்தியாவுக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அசத்திய கேஎல் ராகுல் 73 (70) ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் சார்பில் ஷகிப் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் 41, ஷகிப் அல் ஹசன் 27, முஸ்பிகர் ரஹீம் 18 என முக்கிய வீரர்கள் போராடினாலும் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தார்கள். அதனால் 136/9 என வங்கதேசம் திணறியதால் இந்தியாவின் வெற்றி உறுதியென்று ரசிகர்கள் நினைத்த போது நங்கூரமாக நின்ற மெஹதி ஹசன் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38* (39) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அரிதான சாதனை:
போதக்குறைக்கு கைக்கு வந்த அல்வா போன்ற கேட்ச்சை கேஎல் ராகுல் தவற விட்டதை பயன்படுத்திய அவருக்கு உறுதுணையாக நின்ற முஸ்தபிசுர் ரகுமான் 10* (11) ரன்கள் எடுத்ததால் 46 ஓவரிலேயே 187/9 ரன்கள் எடுத்த வங்கதேசம் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் சொதப்பினாலும் பந்து வீச்சில் போராடி 9 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர்கள் கடைசி விக்கெட்டுக்கு வங்கதேசம் 51* ரன்கள் பாரினர்ஷிப் அமைக்கும் அளவுக்கு டெத் ஓவர்களில் மோசமாக செயல்பட்டு வெற்றியை தாரை வார்த்தது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் 2 விக்கெட்களை எடுத்தார். குறிப்பாக தன்னுடைய 5வது ஓவரில் அஃபிப் ஹசைனை 6 ரன்களில் அவுட்டாக்கிய அவரது கடைசி பந்தில் எபாதத் ஹுசைன் பந்தை உள்ளே சென்று இறங்கி எதிர்கொள்கிறேன் என்ற பெயரில் ஸ்டம்பில் மோதி தன்னைத்தானே ஹிட் விக்கெட் முறையில் அவுட் செய்து கொண்டு 2வது விக்கெட்டை பரிசளித்தார். பொதுவாகவே கிரிக்கெட்டில் டெயில் எண்டர்கள் எனப்படும் கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் இது போல ரசிகர்கள் முகத்தில் புன்னகை ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்வது வழக்கமாகும்.

- Advertisement -

ஆனால் அறிமுகமானது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் முறையே 0*, 0, 0*, 0, 2, 1, 1, 0, 0*, 0*, 0, 0, 0*, 0*, 0*, 0*, 0* 4, 0*, 0*, 0, 0*, 0, 0*, 0, 0*, 3*, 1, 21* என நிறைய போட்டிகளில் ரன்கள் எடுக்க முடியாமல் சமீப காலங்களில் ரசிகர்களிடம் கிண்டல்களுக்கு உள்ளான எபாதத் ஹுசைன் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய அறிமுக போட்டியிலும் 0* ரன்களில் அவுட்டாகாமல் இருந்தார். அந்த நிலையில் தன்னுடைய 2வது ஒருநாள் போட்டியாக இப்போட்டியில் விளையாடிய அவர் கேரியரில் முதல் ரன்னை எடுப்பதற்கு முன்பாகவே ஹிட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தங்களது கேரியரில் முதல் ரன்னை எடுப்பதற்கு முன்பாகவே ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த 2வது வீரர் என்ற அரிதான பரிதாப சாதனையை எபோதத் ஹொசைன் படைத்துள்ளார். இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதலும் கடைசியுமாக கடந்த 1978ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் “பாஃவுட் பாச்சுஸ்” தனது கேரியரில் முதல் ரன் எடுப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். தற்போது 44 வருடங்கள் கழித்து மீண்டும் அப்படி ஒரு அரிதான நிகழ்வு ஒருநாள் கிரிக்கெட்டில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement