- Advertisement -
ஐ.பி.எல்

வீடியோ : நேரடியாக புவனேஷ்வர் குமார் காலில் விழுந்த டேவிட் வார்னர், வியந்த இஷாந்த் சர்மா – காரணம் என்ன

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்ற 35வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி கேப்பிடல்ஸ் தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் தவிப்பதால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் போராடி 144/9 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அக்சர் பட்டேல் மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் தலா 34 ரன்கள் சேர்க்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 145 ரன்கள் துரத்திய ஹைதராபாத் அணிக்கு மயங் அகர்வால் 49 (39) ரன்கள் எடுத்த போதிலும் ஹாரி ப்ரூக் 7, ராகுல் திரிபாதி 15, அபிஷேக் சர்மா 5, கேப்டன் ஐடன் மார்க்கம் 3 என முக்கிய வீரர்கள் டெல்லியின் நேர்த்தியான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் கடைசி நேரத்தில் ஹென்றிச் க்ளாஸென் 31 (19) ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 24* (15) ரன்களும் எடுத்தும் 20 ஓவர்களில் 137/6 ரன்களுக்கு ஹைதராபாத்தை கட்டுப்படுத்தி வென்ற டெல்லி சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

காலில் விழுந்த வார்னர்:
அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக 150க்கும் குறைவான இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி மிகச் சிறப்பான வெற்றி பெற்றது. அதனால் கடந்த 2016இல் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து ஏராளமான ரன்களை அடித்தும் ஒரு வருடம் சுமாராக செயல்பட்டதால் நன்றி மறந்து கழற்றி விட்ட ஹைதராபாத் அணி நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த வெற்றியை கேப்டன் டேவிட் வார்னர் வெறித்தனமாக கொண்டாடினார்.

முன்னாதாக 2016 – 2021 வரை ஹைதராபாத் அணிக்க்காக விளையாடிய அவர் 2019க்குப்பின் முதல் முறையாக இப்போட்டியில் ஹைதராபாத் மைதானத்தில் களமிறங்கினார். அந்த நிலையில் ஹைதராபாத் நிர்வாகம் நன்றி மறந்தாலும் தங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்து தங்களது மனதில் நீங்காத இடம் பிடித்த அவருக்கு ஹைதராபாத் நகரை சேர்ந்த ரசிகர்கள் இப்போட்டியின் துவக்கத்திலேயே ஆரவாரமான வரவேற்பு கொடுத்தனர். அதை விட போட்டி துவங்குவதற்கு முன்பாக ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நட்சத்திர இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் மற்றும் டெல்லி அணிக்காக விளையாடும் மற்றொரு நட்சத்திர இந்திய வீரர் இசாந்த் சர்மா ஆகியோர் இணைந்து பேசிக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

அப்போது புவனேஸ்வர் குமாரை பார்த்த டேவிட் வார்னர் அவரது அருகே சென்று அவரிடம் கை கொடுக்காமல் நேரடியாக அவரது காலில் விழுந்து அப்படியே கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். தமக்கு நிகராக ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரராக இருக்கும் அவர் திடீரென்று தமது காலில் விழுந்ததை சற்றும் எதிர்பாராத புவனேஸ்வர் குமார் சிரித்த முகத்துடன் பதிலுக்கு கட்டியணைத்து அன்பை பகிர்ந்தார். அதை அருகிலிருந்து பார்த்த இசாந்த் சர்மா எதற்காக வார்னர் சம்பந்தமின்றி காலில் விழுந்தார் என்ற வியப்புடன் சிரித்த முகத்துடன் பார்த்தார்.

இதையும் படிங்க:SL vs IRE : இலங்கையை அதன் சொந்த மண்ணில் அதிர விட்ட அயர்லாந்து – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சம் தொட்டு பெரிய சாதனை

2016 முதல் 2020 வரை ஹைதராபாத் அணியை வார்னர் வெற்றிகரமாக வழி நடத்துவதற்கு பந்து வீச்சு துறையில் புவனேஸ்வர் குமார் முக்கிய காரணமாக இருந்தார் என்றே சொல்லலாம். அந்த நிலையில் ஹைதராபாத் அணி நிர்வாகம் தம்மை நன்றி மறந்து கூல்ட்ரிங்ஸ் தூக்க வைத்த போது ஒருவேளை புவனேஸ்வர் குமார் ஆறுதலாகவும் துணையாகவும் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இப்படி பல ஆயிரம் ரசிகர்கள் இருக்கும் மைதானத்தில் நேரலையில் அவரது காலில் டேவிட் வார்னர் விழுந்து கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -