வீடியோ : மேட்ச்க்கு முன்னாடி பும்ரா போன்ற வீரர்கள் ஊசி போட்டுப்பாங்க – உண்மையை அம்பலமாக்கிய சேட்டன் சர்மா

Chetan Sharma Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் கேப்டன் சர்மா பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் பதிவு செய்யப்படுகிறோம் என்பது தெரியாமலேயே இந்திய அணியில் நடக்கும் பல குளறுபடியான உண்மைகளை பேசியுள்ளது புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக விராட் கோலி – சௌரவ் கங்குலி ஆகியோரிடையே மோதல் என்ற வதந்திகளை உண்மையாகும் வகையில் பேசிய அவர் இந்திய அணிக்கு தேர்வாக ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் தமது வீட்டுக்கு வந்து தம்மிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. அந்த வகையில் இந்திய வீரர்களின் ஃபிட்னஸ் பற்றி ரசிகர்கள் அறியாத உண்மைகளை அவர் பேசியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக முக்கிய போட்டிகளில் முதுகெலும்பாக கருதப்படும் சில வீரர்கள் 100% முழுமையாக பிட்டாக இல்லை என்றாலும் வலியை குறைக்கும் வலி நிவாரணி ஊசிகளை போட்டுக் கொண்டு விளையாடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயமடைந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று முழுமையாக குணமடைந்து இந்திய அணிக்கு தேர்வானார்கள். ஆனால் ஒரு சில போட்டிகளில் விளையாடிய பின் மீண்டும் காயமடைந்த அவர்களில் சிலர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக வெளியேறியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஊசி போட்டுப்பாங்க:
இருப்பினும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழுமையாக குணமடைந்து பயிற்சிகளை எடுத்து 100% குணமாகி விட்டார் என்ற சான்றிதழை பெறும் வீரர்கள் எப்படி மீண்டும் காயமடைகிறார்கள் என்ற குழப்பம் சமீப காலங்களாக இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலான தருணங்களில் அது போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் 80% மட்டுமே குணமடைந்தும் 100% குணமடைந்து விட்டதாக என்சிவியில் சான்றிதழை வாங்கிக்கொண்டு தங்களை தேர்வு செய்யுங்கள் என்று தம்மிடம் வருவார்கள் என்ற மற்றுமொரு உண்மையை சேட்டன் சர்மா போட்டுடைத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வீரர்கள் முழுமையாக பிட்டாக இல்லை என்றாலும் அவர்கள் ஊசிகளை போட்டுக் கொண்டு விளையாடுவார்கள். குறிப்பாக 80% பிட்டாக இருந்தால் கூட அவர்கள் ஊசிகளை போட்டுக் கொண்டு விளையாடுவதற்கு தயாராகி விடுவார்கள். அதனால் அந்த வீரர்களால் மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெற முடியாது என்று தெரிந்தும் அவர்கள் போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க விரும்ப மாட்டார்கள். மேலும் ஊக்க மருந்து எதிர்ப்பு ஏஜென்சிகளிடம் வலி நிவாரணிகள் பிடிபடுவதால் அவர்கள் இந்த ஊசிகளை எடுத்துக் கொள்கிறார்கள்”

- Advertisement -

“அத்துடன் நிறைய வீரர்கள் 80 – 85% மட்டுமே ஃபிட்டாக இருந்தாலும் தங்களை தேர்வு செய்யுமாறு என்னிடம் கோரிக்கை வைப்பார்கள். குறிப்பாக என்சிஏவில் 100% ஃபிட்டாகி விட்டோம் என்ற சான்றிதழை வாங்கிக்கொண்டு அவர்கள் வருவார்கள். ஒருமுறை பும்ரா தன்னுடைய பெரிய காயத்தில் குணமடையாமல் இருந்தார். அவரைப் போன்ற மேலும் சில வீரர்கள் அந்தரங்கமாக ஊசிகளை போட்டுக்கொண்டு நாங்கள் விளையாட தயாராகி விட்டோம் என்று கூறினார்கள். நான் வலி நிவாரணியை பற்றி பேசுகிறேன்”

“அவர்கள் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது ஊக்க மருந்துக்கு வரும். ஆனால் ஊக்க மருந்துக்கு எதிராக எந்த ஊசிகள் வரும் என்பதை இந்திய வீரர்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்றாலும் முழுமையான உடல் தகுதியில் இல்லாத போது சில வீரர்கள் போட்டியில் விளையாடுவதற்காக ஊசி போட்டுக் கொள்கிறார்கள். மேலும் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக பும்ராவை நாங்கள் அவசரப்படுத்தினோம்”

இதையும் படிங்க: IND vs AUS : நீங்க 2 ஆவது போட்டியில் விளையாடலாம். எந்த தடையும் இல்ல – பச்சை கொடி காட்டிய நிர்வாகம்

“அதனால் என்னவாயிற்று என்று நீங்களே பாருங்கள். தற்போது அவரை எம்சிஏ அதிகாரிகள் கூர்ந்து கவனித்து வருவதால் அவர் விரைவில் இந்திய அணியில் விளையாடுவதை பார்க்க முடியும்” என்று கூறினார். அதாவது சில நேரங்களில் 100% உடல் தகுதி இல்லையென்றாலும் ஊக்க மருந்து அல்லாத வலி நிவாரணி ஊசிகளை போட்டுக்கொண்டு இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் ஐசிசி வரை செல்லுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement