வீடியோ : நேரலையில் முன்னாள் இலங்கை வீரருக்கு நிகழ்ந்த சம்பவம் – வயிறு குலுங்க சிரித்த இதர வர்ணனையாளர்கள், நடந்தது என்ன

Farveez Maharoof
- Advertisement -

ஐபிஎல் தொடர் போல இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரை அந்நாட்டு வாரியம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அந்த வரிசையில் 2022 சீசன் கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. துவண்டு கிடக்கும் இலங்கை கிரிக்கெட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் கண்டி, ஜாப்னா, கொழும்பு மற்றும் கால்லே ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் வெற்றிகளைப் பெற்ற கொழும்பு மற்றும் ஜாப்னா ஆகிய அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்றது.

கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொழும்பு 20 ஓவர்களில் 163/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 49 (40) ரன்களும் சரித் அசலங்கா 31 (23) ரன்களும் எடுக்க ரவி போபாரா அதிரடியாக 47* (33) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 164 ரன்களை துரத்திய ஜாப்னா அதாவது யாழ்ப்பாணம் அணி ரஹ்மத்துல்லா குர்பாஸ் 36 (18), அவிஷ்கா பெர்னான்டோ 50 (43), சமர விக்ரமா 44 (27) ஆகியோரது பொறுப்பான ரன் குவிப்பால் 8 விக்கெட்டுகளை இழந்தாலும் கடைசி ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

சம்பவம் செய்த பறவை:
அதனால் 2022 லங்கா பிரீமியர் லீக் கோப்பையை வென்ற யாழ்ப்பாணம் அணி தொடர்ந்து 3வது முறையாக இத்தொடரின் ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது. அப்படி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இத்தொடரில் இலங்கையின் பர்வேஸ் மகரூஃப், வெஸ்ட் இண்டீசின் டேரன் கங்கா போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் வரணையாளராக செயல்பட்டனர். அந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்த ஒரு போட்டியை பற்றி அவர்கள் தீவிரமான விவாதம் செய்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக அந்த விவாதம் திறந்த வெளியில் நடைபெற்றது. அப்போது இரவு நேரத்தில் தூங்கும் வேலையை பார்க்காமல் இறை தேடிச் சென்ற ஒரு பறவை மிகச் சரியாக மும்முரமாக பேசிக் கொண்டிருந்த முன்னாள் இலங்கை வீரர் பர்வேஸ் மஃரூப் அவருடைய தோள்பட்டை பகுதி மீது எச்சமிட்டு சென்றது. அது அவருடைய தலை மற்றும் கால் பகுதிகளிலும் விழுந்ததை கவனித்த அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி நெரோலி மிடோஸ் “அனேகமாக உங்களுக்கு என்ன நடந்தது என்பதை பற்றி நீங்கள் அறிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி அவருக்கு பறவை எச்சமிட்டதை சுட்டி காட்டினார்.

- Advertisement -

அத்துடன் அவரும் அருகில் இருந்த மற்றொரு முன்னாள் டேரன் டேரன் கங்கா ஆகியோரும் வயிறு குலுங்க கடுமையாக சிரித்து மகிந்தார்கள். ஆனால் அதற்காக வருத்தப்படாத பர்வேஸ் மஃரூப் அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு இலங்கையில் இது போன்ற நிகழ்வுகளை அதிர்ஷ்டமாக கருதுவோம் என்று பதிலளித்து அந்த தருணத்தை அற்புதமாக சமாளித்தார். அது பற்றி அவர் சொன்னது பின்வருமாறு. “ஒருவேளை எனக்கு இன்று நல்ல அதிர்ஷ்டம் இருந்திருக்கலாம். இலங்கையில் இதை நாங்கள் அதிர்ஷ்டம் வரப்போவதற்கான அறிகுறியாக நம்புகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2023 : வரலாற்றிலேயே சாதூரியமாக செயல்பட்ட ஆர்சிபி, அப்படினா கப் கன்பார்ம் தான் – புதிய அணி வீரர்கள் பட்டியல் இதோ

கிரிக்கெட் வரலாற்றில் பல தருணங்களில் பறவைகள், நாய்கள் ஏன் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு டி20 போட்டியில் பாம்பு கூட உள்ளே புகுந்து அலப்பறைகள் செய்த கதைகள் உள்ளது. ஆனால் நேரலையில் பேசிக் கொண்டிருந்த வர்ணனையாளர் மீது பறவை எச்சமிட்டது இதுவே முதல் முறை என்று அதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள். அப்படி நேரலையில் பறவை செய்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement