ஐபிஎல் 2023 : வரலாற்றிலேயே சாதூரியமாக செயல்பட்ட ஆர்சிபி, அப்படினா கப் கன்பார்ம் தான் – புதிய அணி வீரர்கள் பட்டியல் இதோ

RCB Faf Du Plessis
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலம் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெற்று முடிந்தது. அதில் பங்கேற்ற 405 வீரர்களில் தங்களுக்கு தேவையான கிரிக்கெட் வீரர்களை வாங்குவதற்கு களமிறங்கிய 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் மிகவும் சாதூரியமாக செயல்பட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் வரலாற்றில் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற எத்தனையோ உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடிய போதிலும் இதுநாள் வரை அந்த அணியால் கோப்பையை நெருங்க முடிந்ததே தவிர முத்தமிட முடியவில்லை.

ஐபிஎல் தொடரின் போது முக்கிய நேரங்களில் ஒரு சில தோல்விகளை சந்தித்தால் அதற்காக பதற்றமடைந்து உடனடியாக அடுத்த போட்டியில் அதிரடியான மாற்றங்களை செய்வதே அதற்கு முதல் காரணமாக அமைந்தது. ஆனால் அதை இந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற டு பிளேஸிஸ் தலைமையில் பெரும்பாலும் தவிர்த்த பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்று வரை சென்று அசத்தலாக செயல்பட்டது. அதை விட கடந்த காலங்களில் தோல்விகளை சந்தித்தால் சில முக்கிய வீரர்களை மொத்தமாக கழற்றி விட்டால் அடுத்த சீசனில் கோப்பையை வென்று விடலாம் என்ற அணுகுமுறையை பெங்களூரு நிர்வாகம் கடைபிடித்தது இதுவரை கோப்பை வெல்ல முடியாமல் தவிப்பதற்கு 2வது முக்கிய காரணமாகும்.

- Advertisement -

கோப்பை வெல்லுமா:
அதையும் இம்முறை தவிர்த்த பெங்களூரு நிர்வாகம் குறைந்த அளவிலான வீரர்களை மட்டுமே கழற்றி விட்டு விராட் கோலி, டு பிளேஸிஸ், தினேஷ் கார்த்திக், ராஜா படிதார், மேக்ஸ்வெல் உள்ளிட்ட நிறைய வீரர்களை தக்க வைத்தது. அதனாலேயே இந்த வருட ஏலத்தில் 8.75 என்ற மிகவும் குறைவான கையிருப்பு தொகையுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. மேலும் வரலாற்றில் நடைபெற்ற ஏலங்களில் ஏதேனும் ஒரு சில வீரர்களை வாங்குவதற்காக அசால்டாக 10 – 15 கோடிகளை வாரி இறைத்த அந்த அணி நிர்வாகத்தின் சொதப்பலான அணுகுமுறையும் தோல்விக்கு 3வது காரணமாகும்.

அதை இம்முறை ஏலத்தில் அறவே தவிர்த்த அந்த அணி ஏலத்தில் எந்த வீரர்களையும் 4 கோடிக்கு மேல் வாங்கவில்லை. மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி, வில் ஜேக்ஸ் ஆகிய இங்கிலாந்து வீரர்களை குறைந்த விலைக்கு வளைத்துப் போட்ட அந்த அணி சில இளம் வீரர்களை அடிப்படை விலையில் வாங்கி அசத்தியது. மொத்தத்தில் வரலாற்றில் செய்த தவறுகளையும் சொதப்பல்களையும் பதற்றத்தையும் இம்முறை செய்யாத பெங்களூரு நிர்வாகம் ஏலத்தில் சாதுரியமாக நடந்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

2023 ஐபிஎல் ஏலத்தில் அந்த அணி வாங்கிய புதிய வீரர்களின் பட்டியல் இதோ: ரீஸ் டாப்லி (1.9 கோடி), ஹிமான்சு சர்மா (20 லட்சம்), வில் ஜேக்ஸ் (3.2 கோடி), மனோஜ் பன்டாஜ் (20 லட்சம்), ராஜன் குமார் (70 லட்சம்), அவினாஷ் சிங் (60 லட்சம்), சோனு யாதவ் (20 லட்சம்)

இவர்களை வாங்குவதற்கு 7 கோடிகளை மட்டுமே செலவிட்ட பெங்களூரு நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடங்களான 25 வீரர்களையும் வெற்றிகரமாக வாங்கி அணியை முழுமை படுத்தியுள்ளது. அவர்களை வாங்கியது போக பெங்களூரு அணியிடம் இன்னும் 1.75 கோடி ஏலத்தொகை கையிருப்பு உள்ளது. இதனால் டு பிளேஸிஸ் தலைமையில் ஆரம்பத்திலேயே நன்கு செட்டிலாகியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2023 புத்தாண்டில் நடைபெறும் புதிய சீசனில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.

இதையும் படிங்க: யார் இந்த ஷேக் ரஷீத். 18 வயதே ஆன இந்த பிளேயரை சி.எஸ்.கே வாங்க என்ன காரணம்? – விவரம் இதோ

புதிய ஆர்சிபி அணி இதோ: பப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, சூயஸ் பிரபுதேசாய், ரஜத் படிடார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், பின் ஆலன், க்ளென் மேக்ஸ்வெல், வணிந்து ஹஸரங்கா, ஷபாஸ் அஹ்மத், ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கரன் சர்மா, மஹிபால் லோம்ரர், முகமத் சிராஜ், ஜோஷ் ஹேசல்வுட், சித்தார்த் கௌல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, ஹிமான்சு சர்மா, வில் ஜேக்ஸ், மனோஜ் பாண்டஜ், ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ்

Advertisement