AUS vs ENG : மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா, சூப்பர்மேனாக மாறி சிக்ஸரை தடுத்த இங்கி வீரர் – அனைவரும் பாராட்டும் வீடியோ உள்ளே

- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் கோப்பை வெல்வதற்காக அதில் பங்கேற்கும் 16 அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வரும் நிலையில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைப்பதற்கு தயாராகும் வகையில் வலுவான இங்கிலாந்தை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டு வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற முதல் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் கோப்பையை வெல்ல கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் அக்டோபர் 12ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் 17 (13) அலெஸ் ஹேல்ஸ் 4 (7) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 7 (11) ஹரி ப்ரூக் 1 (2) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக செயல்பட்ட டேவிட் மாலன் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82 (49) ரன்கள் குவித்து அவுட்டாக அவருடன் பேட்டிங் செய்த மொயின் அலி தனது பங்கிற்கு 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 (27) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா தோல்வி:
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து 178/7 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 179 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 13 (13) டேவிட் வார்னர் 4 (11) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான ஏமாற்றிய நிலையில் கிளென் மேக்ஸ்வெல் 8 (11) மார்கஸ் ஸ்டோனிஸ் 22 (13) என அடுத்து வந்த முக்கிய பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்களை எடுக்காமல் பெவிலியன் திரும்பி பின்னடைவை கொடுத்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் போராடிய மிட்செல் மார்ஷ் 45 (29) ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் வெற்றிக்கு போராடிய டிம் டேவிட் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 40 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே பட் கமின்ஸ் சிக்ஸர் அடித்தாலும் அதன்பின் 2, 1, 1, 1, 2 என அவரும் மேத்தியூ வேடும் அதிரடியாக அடிக்க முடியாத அளவுக்கு அற்புதமாக பந்து வீசிய சாம் கரண் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை திரில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அத்துடன் பந்து வீச்சில் அதிகபட்சமாக அவர் 3 விக்கெட்டுகள் எடுத்தாலும் பேட்டிங்கில் 82 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேவிட் மாலன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து உலகக் கோப்பைக்கு முன்பாக அற்புதமான வெற்றியை பதிவு செய்து புத்துணர்ச்சி பெற்றுள்ளது. மறுபுறம் உலகக்கோப்பை துவங்க இன்னும் 4 நாட்கள் கூட இல்லாத நிலையில் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா இப்படி தோற்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

சூப்பர்மேன் ஸ்டோக்ஸ்:
கேப்டன் ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் ஆகியோரது சுமாரான பேட்டிங்கே அந்த அணியின் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைக்க போராடிய மிட்செல் மார்ஷ் சாம் கரண் வீசிய 12வது ஓவரில் சிக்சரை பறக்க விட்டார். லாங் ஆஃப் திசையை நோக்கி பறந்து கிட்டத்தட்ட பவுண்டரி எல்லையை கடந்த அந்த பந்தை அந்தப் பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் சூப்பர் மேனை போல தாவிப் பறந்து கேட்ச் பிடித்தார்.

ஆனால் பேலன்ஸ் செய்ய முடியாமல் பவுண்டரி எல்லையைத் தொடப் போகிறோம் என்பதை உணர்ந்த அவர் கீழே விழுவதற்கு நொடிப்பொழுதிற்கு முன்பாக பந்தை மைதானத்திற்குள் தூக்கிப் போட்டு விழுந்தார். அதனால் அந்த இடத்தில் கேட்ச் பிடிக்க முடியாவிட்டாலும் தன்னுடைய அணிக்கு 4 ரன்களை மிச்சப்படுத்தி வெற்றிக்கு பங்காற்றிய அவரது பீல்டிங்கை பார்க்கும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வியப்படைந்து கைதட்டி பாராட்டுகிறார்கள்.

Advertisement