- Advertisement -
உலக கிரிக்கெட்

வீடியோ : ஆரம்பத்திலேயே பாபர் அசாம் பவுலிங் போடும் அளவுக்கு நியூஸிலாந்திடம் தள்ளாடும் பாகிஸ்தான் – முழுவிவரம் இதோ

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் தோற்று ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையிலும் மண்ணை கவ்விய அந்த அணி உலக அளவில் கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்துள்ளது. அதனால் மானத்தை மீட்டெடுக்க இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள அந்த அணி டிசம்பர் 26ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே பொறுப்புடன் செயல்பட்ட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து அமர்க்களப்டுத்தியது. அந்த அணிக்கு அப்துல்லா சபிக் 7, இமாம்-உல்-ஹக் 24, ஷான் மசூட் 3, சவுத் ஷாகீல் 22 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். இருப்பினும் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது 4வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்து 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 9 பவுண்டரியுடன் 86 ரன்கள் குவித்து அபார கம்பேக் கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பாபரின் பவுலிங்:
அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த கேப்டன் பாபர் அசாம் நங்கூரமாக நின்று 15 பவுண்டரி 1 சிக்ஸருடன் சதமடித்து 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர்களுக்குப் பின் வந்த ஆஹா சல்மான் தனது பங்கிற்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 17 பவுண்டரியுடன் சதமடித்து 103 ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் இதர வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுதி 3 விக்கெட்கள் எடுத்தார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து கடந்த தொடரில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து போல் அதிரடியாக விளையாடவில்லை என்றாலும் அமைதிப்படையாக பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் லாதம் – டேவோன் கான்வே ஆகியோர் முதலில் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட பாகிஸ்தானை சிறப்பாக எதிர்கொண்டு புதிய பந்து தேயும் அளவிற்கு நங்கூரமாக நின்று பேட்டிங் செய்து அரை சதம் கடந்தனர். அவர்களை பிரிப்பதற்காக இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய அப்ரார் அகமது மற்றும் நவ்மன் அலி ஆகியோரை கேப்டன் பாபர் அசாம் அறிமுகப்படுத்தினார்.

- Advertisement -

ஆனால் அதையும் லாவகமாக எதிர்கொண்ட அந்த ஜோடிக்கு எதிராக சுழலில் மாயாஜாலம் நிகழ்த்த முடியாத பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திண்டாடினார்கள். அந்தளவுக்கு அற்புதமாக பேட்டிங் செய்த அந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்துக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. அதனால் கடுப்பான பாபர் அசாம் சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்தியும் எந்த வெற்றியும் காண முடியாமல் தவித்தார்.

ஒரு கட்டத்தில் அனைத்து பாகிஸ்தான் பவுலர்களும் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியதால் மேலும் அதிருப்தியடைந்த அவர் எப்படியாவது ஓப்பனிங் ஜோடியை 2வது நாளுக்குள் உடைக்க வேண்டும் என்ற முயற்சியுடன் தேநீர் இடைவேளைக்கு முன்பாக தாமே பந்து வீச வந்தார். பொதுவாகவே முதன்மை பேட்ஸ்மேனான அவர் பெரும்பாலும் பந்து வீச மாட்டார் என்ற நிலையில் நீண்ட நாட்கள் கழித்து ஆஃப் ஸ்பின்னாராக மொத்தம் 3 ஓவர்கள் பந்து வீசியது பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்கவிராட் கோலியை அலறவிட்ட பவுலருக்கு இப்படி ஒரு நிலையா? – ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாத அவலம்

ஆனாலும் என்ன பயன் என்பது போல் அதையும் லாவகமாக எதிர்கொண்ட அந்த ஜோடி விக்கெட்டை விடாமல் 2வது நாள் முடிவில் நியூசிலாந்து 165/0 என்ற நிலையுடன் வலுவான தொடக்கத்தை கொடுத்தது. அந்த அணிக்கு டாம் லாதம் 78* ரன்களுடனும் டேவோன் கான்வே 82* ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். தற்போது 10 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள நியூஸிலாந்து இன்னும் பின்தங்கியுள்ள 273 ரன்களை 3வது நாளில் எளிதாக குவித்து முன்னிலை பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் பவுலிங் இதுவரை சுமாராகவே இருந்து வருகிறது.

- Advertisement -
Published by