IND vs ZIM : ஜிம்பாப்வே தொடருக்கான டீமில் வாஷிங்க்டன் சுந்தர் விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

Sundar-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணியானது அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsZIM

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் போட்டிகளுக்கான தேதி, போட்டி நடைபெறும் இடம், தொலைக்காட்சி ஒளிபரப்பு என அனைத்து விதமான அதிகாரபூர்வ தகவல்களும் வெளியிடப்பட்டு விட்டன.

இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடம் பெற்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணிக்காக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அடுத்து காயம் காரணமாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்தார்.

Sundar-1

அண்மையில் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த தொடரின் இறுதி நேரத்தில் தோள்பட்டையில் காயமடைந்தார். அதன் காரணமாக தற்போது ஓய்வெடுத்து வரும் அவர் இந்த ஜிம்பாப்வே தொடருக்காக கிளம்புவதற்கு முன்னர் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் அவர் உடற்பகுதியினை நிரூபிப்பதில் தற்போது தொடர்ந்து சிக்கல்கள் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்த ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு வாஷிங்டன் சுந்தர் சென்றாலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : வங்கதேசத்தை புரட்டி எடுத்து உச்சக்கட்ட பார்மில் இந்தியாவுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் ஜிம்பாப்வே வீரர்

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தவறவிட்ட வாஷிங்டன் சுந்தர் இந்த ஆண்டும் தொடர்ச்சியாக காயங்களால் அவதிப்பட்டு வருவதால் இந்த முறையும் டி20 உலக கோப்பையில் அவரது பெயர் பரிசீலிக்கப்படாமல் கூட போகலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement