IND vs ZIM : வங்கதேசத்தை புரட்டி எடுத்து உச்சக்கட்ட பார்மில் இந்தியாவுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் ஜிம்பாப்வே வீரர்

Shikandar Raza Ban vs ZIM
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அசத்தலாக செயல்பட்ட ஜிம்பாப்வே 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. அதைத் தொடர்ந்து நடைப்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் தமீம் இஃபால் 62, லிட்டன் தாஸ் 81, ஆனமல் 73, முஸ்தபிசுர் ரஹ்மான் 52* ஆகியோரால் 303/2 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய ஜிம்பாப்வேக்கு சக்கப்வா 2, முசகண்டா 4, மாதேவரே 19 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 62/3 என தடுமாறியது.

அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த இன்னசன்ட் கயா மற்றும் சிகந்தர் ராசா ஆகியோர் மேற்கொண்டு எளிதாக விக்கெட்டை விடாமல் நங்கூரத்தை போட்டு நிதானமாகவும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். 14வது ஓவரில் ஜோடி சேர்ந்த 42 ஓவர்கள் வரை அற்புதமாக பேட்டிங் செய்து 4வது விக்கெட்டுக்கு 192 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கயா 11 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 110 (122) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அவதரித்த நாயகன்:
இருப்பினும் மறுபுறம் அவரைவிட அட்டகாசமாக பேட்டிங் செய்த சிகந்தர் ராசா 8 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 135* (109) ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 48.2 ஓவரிலேயே 307/5 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 290/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 50, மகமதுல்லா 80* ரன்களை எடுத்தனர்.

அதை துரத்திய ஜிம்பாப்வேவுக்கு மருமணி 25, கைதினோ 0, இன்னசென்ட் கயா 7, மாதேவரே 2 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பியதால் 49/4 என திணறியது. அப்போது மீண்டும் நடுவரிசையில் நங்கூரமாக நின்ற சிகந்தர் ராசா இம்முறை கேப்டன் சக்கப்வாவுடன் ஜோடி சேர்ந்து 44 ஓவர்கள் வரை 201 ரன்கள் ப்ரம்மாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதில் கேப்டன் சக்கப்வா 10 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 102 (75) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

உச்சக்கட்ட பார்ம்:
மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் மீண்டும் சதமடித்த சிகந்தர் ராசா 8 பவுண்டரி 2 சிக்சருடன் 117* (127) ரன்கள் குவித்து 291/5 ரன்களை எடுக்க வைத்து மீண்டும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். அந்த நிலைமையில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 257 ரன்களை துரத்திய ஜிம்பாப்வேக்கு அவர் கோல்டன் டக் அவுட்டான நிலையில் இதர வீரர்களும் சொதப்பியதால் 105 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட்டில் 9 வருடங்கள் கழித்து வங்கதேசத்தை தோற்கடித்து கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

1. இந்த வெற்றிக்கு 252 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் 2 ஆட்டநாயகன் விருதுகளையும் வென்று முக்கிய பங்காற்றிய சிகந்தர் ராசா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதற்குமுன் நடைபெற்ற டி20 தொடரிலும் இவரே தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

2. அதுபோக சமீபத்தில் விரைவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்றில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. அந்த தொடரிலும் இவர் தான் தொடர் நாயகன் விருதை வென்றார்.

3. அப்படி வரிசையாக 3 தொடர் நாயகன் வென்றுள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஜிம்பாப்வே 3 தொடர்ச்சியான கிரிக்கெட் தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்ய கருப்பு குதிரையாக செயல்பட்டுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற ஜிம்பாப்வே வீரர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சிக்கந்தர் ராசா : 6*
2. ஹெத் ஸ்ட்ரீக் : 5

- Advertisement -

4. மேலும் இந்த தொடரின் 2வது போட்டியில் 135* ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் 5ஆவது இடத்தில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சிகந்தர் ராசா : 135*, 2022
2. மைக்கேல் பிரேஸ்வெல் : 127*, அயர்லாந்துக்கு எதிராக, 2022
3. இயன் மோர்கன் : 124*, அயர்லாந்துக்கு எதிராக, 2013

5. அதுபோக ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்த போட்டிகளில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். முதலிடத்திலும் அவரே தான் (141) உள்ளார்.

இதையும் படிங்க: IND vs ZIM : வங்கதேசத்தை புரட்டி எடுத்து உச்சக்கட்ட பார்மில் இந்தியாவுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் ஜிம்பாப்வே வீரர்

கடந்த 2013 முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் இவர் சமீபத்தில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து தற்போது மீண்டும் விளையாட துவங்கியுள்ள நிலையில் முன்பை விட இருமடங்கு அபாரமாக பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார். இதனால் தனது வாழ்வின் உச்சக்கட்ட பார்மில் உள்ளார் என்ற பாராட்டுக்களை பெற்றுள்ள இவர் 90களில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை மிரட்டிய பழைய ஜிம்பாப்வே அணியை மீண்டும் கொண்டுவரும் ஒரு வீரராக தென்படுகிறார். இப்படிப்பட்ட இவர் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் அதே ஹராரே மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சவாலை கொடுக்க காத்திருக்கிறார்.

Advertisement