அடுத்து வரும் 2 சீரிஸ்ல இவருக்கு வாய்ப்பு குடுங்க. பெரிய ஆளா ரொம்ப நாள் டீம்ல இருப்பாரு – வாசிம் ஜாபர் கருத்து

Jaffer
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை முடித்த கையோடு தற்போது நாடு திரும்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய அணியானது அடுத்தடுத்து இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரில் பங்கேற்று விளையாடயிருக்கிறது. இந்த 2 தொடர்களுக்கான இந்திய அணியும் இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரானது எதிர்வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெற இருக்கிறது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரானது ஜனவரி 18-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 2 தொடர்களுக்கான இந்திய அணியையும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு தான் தேர்வு செய்து அறிவிக்கப்போகிறது.

இந்நிலையில் இந்த 2 தொடர்களுக்கான இந்திய அணியிலும் இளம் வீரரான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

எதிர்வரும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்படி இந்த 2 தொடர்களிலும் அவர் வாய்ப்பினை பெற்றால் நீண்ட தூரம் அவர் இந்திய அணியில் பயணிப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs SL : சம்சு சாம்சனுக்காக ரிஷப் பண்டிற்கு ஆப்பு வைத்த பி.சி.சி.ஐ – இதுதான் கரெக்ட்

ஏற்கனவே அண்மையில் வெளியான அறிவிப்பின் படி இலங்கை அணிக்கெதிராக தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டிற்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement