அவரு செட்டாகல. ரோஹித் கூட இந்த இலங்கை தொடரில் இவரை ஒப்பனராக இறக்குங்க – வாசிம் ஜாபர் வேண்டுகோள்

Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று லக்னோ மைதானத்தில் துவங்க உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்த நிலையில் தற்போது இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே முன்னணி வீரர்கள் இல்லாமல் தடுமாறி வரும் இலங்கை அணியை இந்திய அணி எளிதில் வீழ்த்திவிடும் என்று கூறப்படுகிறது.

indvswi

- Advertisement -

இந்நிலையில் அணியில் புதிதாக இணைந்துள்ள இளம் வீரர்கள் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த இலங்கை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் யார் களமிறங்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வசீம் ஜாபர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இலங்கை தொடரில் ரோகித் சர்மாவுடன் ருதுராஜ் கெய்க்வாட் தான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது ரோகித் சர்மாவுடன் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

ruturaj

ஏனெனில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இஷான் கிஷன் துவக்க வீரராக அனைத்து போட்டிகளிலுமே விளையாடி விட்டார். இருப்பினும் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் தற்போது ருதுராஜ்க்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அவர் தனது திறனை நிரூபிக்க முடியும்.

- Advertisement -

எனவே நிச்சயம் இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை துவக்க வீரராகவும், இஷான் கிஷனை மிடில் ஆர்டரிலும் பயன்படுத்தலாம் வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கி வெறும் 71 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இடம் பிடிக்கணுமா? அப்போ மொதல்ல இதை பண்ணுங்க – இளம் வீரர்களுக்கு ரோஹித் அட்வைஸ்

மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதன் காரணமாக பல்வேறு முன்னாள் வீரர்களும் அவரின் பேட்டிங் மீது அதிருப்தி தெரிவித்திருந்த வேளையில் தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று வாசிம் ஜாபர் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement