- Advertisement -
ஆசிய கோப்பை

சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆனதில் இருந்து இந்த குறை இருக்கு.. அதை அவர் மாத்தனும் – வாசிம் அக்ரம்

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவின் பார்ம் கவலையளிக்கிறது : வாசிம் ஜாபர்

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை தொடரானது டி20 போட்டிகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் கவலை அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டன் ஆனதிலிருந்து அவருடைய ரன் குவிப்பு குறைந்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் முன்பு அதிரடியாக விளையாடியிருந்த அவர் கேப்டனான பின்னர் ஃபைன் லெக்கில் மட்டுமே விளையாட முயற்சிக்கிறார். அவருடைய ஷாட் செலக்சன் சற்று தவறாக இருக்கிறது.

- Advertisement -

அதனை அவர் உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை வித்தியாசமான வீரராக அதிரடியில் கலக்கும் அவர் இந்திய அணியின் கேப்டன் ஆனதிலிருந்து குறைவான ரன்களையே குவித்து வருகிறார் என வாசிம் ஜாபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா கையில் அணிந்து இருக்கும் இந்த வாட்சின் விலை என்ன தெரியுமா? – தலை சுத்திடும்

அவர் கூறியது போன்றே சூரியகுமார் யாதவ் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக இதுவரை 14 போட்டிகளில் விளையாடி வெறும் 18 ரன்கள் சராசரியுடன் 258 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதிலும் கடைசி 14 போட்டியில் அவர் இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -