
ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் சதம் அடித்ததோடு தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2005 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான சதம் அடித்தார். அதனை தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தடுமாற்றத்தை சந்திக்கவே அதிகளவு விமர்சனத்தை பெற்றிருந்தார். ஆனால் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டும் அவர் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் சுப்மன் கில் ஆஸ்திரேலிய தொடரின் போது இழந்த பார்மை தற்போது எவ்வாறு மீட்டெடுத்தார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய தொடர் முடிந்து அவர் ரஞ்சி டிராபி தொடருக்கு திரும்பியபோது ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக பஞ்சாப் அணி வீரர்களுடன் பயிற்சியில் பங்கேற்று தீவிரமாக உழைத்தார்.
ஒவ்வொரு போட்டிக்கும் முன்னர் வலைப்பயிற்சியில் 30 முதல் 45 நிமிடம் வரை பயிற்சி செய்த அவர் அதிக பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார். இப்படி வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிட்டதால் தான் அவரது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்க முடிந்தது என்று நினைக்கிறேன். ஏனெனில் ரஞ்சி தொடரில் அவர் விளையாடிய முதல் போட்டியில் கூட சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் அதன் பின்னர் மைதானம் எவ்வாறு இருக்கிறது என்பதை கணித்த அவர் மீண்டும் பயிற்சிக்கு திரும்பி அதிக நேரம் களத்தில் இருந்து அதிக பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி செய்தார்.
அதன் பின்னர் மீண்டும் சிறப்பாக விளையாடிய அவர் அடுத்த இன்னிங்சிலேயே சதம் அடித்தார். இப்படி பேட்டிங் ஃபார்ம் சறுக்கல் ஏற்பட்டபோது மீண்டும் வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிட்டு தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டதாலே அவர் பார்மிற்கு திரும்பியிருக்கிறார். அவர் ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து திரும்பிய போது அவரிடம் பேட்டிங் பார்ம் எதுவும் பேசவில்லை.
இதையும் படிங்க : இந்திய அணியுடன் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் மோதப்போகும் அணி இதுதான் – டேனியல் கிறிஸ்டியன் கருத்து
அதேபோன்று வலைப்பயிற்சியிலும் பேட்டிங் ஃபார்ம் பற்றி எல்லாம் பேசாமல் அவர் செய்ய வேண்டிய சிறு சிறு டெக்னிக்கல் மாற்றங்களை மட்டுமே அவரிடம் மாற்றிக்கொள்ளும்படி கூறினேன். அதனை மாற்றிக் கொண்ட அவர் தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என வாசிம் ஜாபர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.