இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நாம் இதனை செய்தால் போதும்: முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அட்வைஸ்

Jaffer
- Advertisement -

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகியது . இந்த போட்டியில் வெற்றி பெற முன்னாள் வீரர்கள் பலரும் பல யோசனைகளை கொடுத்து வருகின்றனர் . அதுபோல் தற்போது தன் பங்கிற்கு தன் யோசனையை கொடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்.

Ind-lose

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி கண்டிப்பாக ரன் சேர்க்க வேண்டும். புஜாரா இன்னும் அதிகமாக ரன் சேர்க்க வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை மூன்று இலக்கமாக மாற்றியே தீர வேண்டும். அப்படி அடித்தால்தான் 350 முதல் 400 ரன்கள் வரை குவிக்க முடியும் .
முதலில் பேட்டிங் செய்தாலும், இரண்டாவது பேட்டிங் செய்தாலும் செய்தாலும் 450 ரன்கள் வரை அடிக்க வேண்டும்.

அப்படி அடிக்கும் பட்சத்தில் போட்டியை நாம் கட்டுக்குள் கொண்டுவரலாம். இல்லை என்றால் இந்தப் போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் வாசிம் ஜாபர்.

rahane

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 242 ரன்களில் ஆட்டமிழந்தது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை விக்கெட் விளையாடிய நியூசிலாந்து அணி 63 ரன்கள் விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.

Advertisement