விராட் கோலிக்கு கூட வாய்ப்பிருக்கு. ஆனா ரோஹித்துக்கு வாய்ப்பே இல்ல – வாசிம் ஜாபர் கருத்து

Wasim-Jaffer
- Advertisement -

இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்து அந்த தொடரிலிருந்து வெளியேறியது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாத வேளையில் இந்த தொடரையும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறவிட்டது ரசிகர்கள் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND-vs-NZ

- Advertisement -

அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2024-இல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தற்போது இந்திய அணி இளம் வீரர்களின் கூட்டணியோடு மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு அடுத்து இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தொடர்ச்சியாக பாண்டியாவின் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியே டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறது.

Rohith

அப்படி பாண்டியா தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர்க்கும் பாண்டியா தலைமையிலான அணியே பங்கேற்கும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என இந்திய அணியன் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் :விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு தொடர்ச்சியாக ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களது டி20 கரியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. விராட் கோலி கூட என்னை பொறுத்தவரை அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவார். ஆனால் ரோகித் சர்மா விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க : IND vs AUS : இந்தமுறை ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தப்போவது இவர்தான் – இர்பான் பதான் கணிப்பு

ஏனெனில் அவர் அடுத்த ஆண்டுடன் 36 வயதை தொட்டுவிடுவார் என்பதால் நிச்சயம் இளவீரர்களைக் கொண்ட அணியே உருவாக்கப்படும். அதனால் கோலிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரோஹித் சர்மா இடம்பெறுவது சந்தேகம் தான் என்றும் வாசிம் ஜாஃபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement