IND vs AUS : இந்தமுறை ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தப்போவது இவர்தான் – இர்பான் பதான் கணிப்பு

pathan 1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி நல்ல பார்மில் இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற இருப்பதினால் இனி வரும் தொடர்கள் அனைத்திலுமே இந்திய வீரர்களின் செயல்பாடு கண்டிப்பாக கவனிக்கப்பட இருக்கிறது.

IND vs NZ Hardik Pandya

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. எதிர்வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் எவ்வாறு செயல்பட போகிறது என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

smith

இந்த டெஸ்ட் தொடரில் எந்த வீரர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்றும் அவரை யார் வீழ்த்தப் போகிறார்கள் என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை இங்கு வீழ்த்துவது இந்திய அணிக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை எப்போதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவரது விக்கெட்டை வீழ்த்துவது எளிதான விஷயம் கிடையாது.

இதையும் படிங்க : கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் தோனி தவறு செய்து விட்டார் – ஆர்.பி.சிங் கருத்து

இருந்தாலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் நிச்சயம் அவரை வீழ்த்துவார் என்று கருதுகிறேன். அக்சர் படேலின் பந்துவீச்சில் ஸ்மித்திற்கு சில சிக்கல்கள் இருக்கிறது என்றும் நிச்சயம் அவரை அக்சர் படேல் வீழ்த்துவார் என்றும் இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement