IND vs AUS : தோல்வி உறுதி – அவருக்கு பார்ட்னரே கிடைக்கல, ரோஹித் கேப்டன்ஷிப் தவறை சுட்டிக்காட்டிய வாசிம் ஜாபர்

Jaffer
Advertisement

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றால் தான் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா விளையாடி வருகிறது. கடந்த 10 வருடங்களாக உலகில் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று இந்த கோப்பையின் நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆரம்பத்திலேயே 2 – 0* (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

Pujara

ஆனால் அதனால் ஏற்பட்ட மமதையோ என்னவோ தெரியவில்லை இந்தூரில் மார்ச் 1ஆம் தேதியன்று துவங்கிய 3வது போட்டியில் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. குறிப்பாக முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் 109 ரன்களுக்கு சுருண்டது. ரோகித் சர்மா 12, புஜாரா 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பார்ட்னரே இல்ல:
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் ஒரு கட்டத்தில் 186/4 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் மேற்கொண்டு 11 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டிய இந்தியா ஆஸ்திரேலியாவை 197 ரன்களுக்கு சுருட்டியது. ஜடேஜா 4, அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 3 என முன்னணி பவுலர்கள் அனைத்து விக்கெட்களையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா பொறுப்புடன் செயல்படாமல் மீண்டும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 163 ரன்களுக்கு சுருண்டது.

Axar Patel 1

அதிகபட்சமாக நங்கூரமாக நின்று போராடிய புஜாரா 59 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் நேதன் லயன் 8 விக்கெட்களை சாய்த்து மிரட்டினார். அதனால் 3வது நாளில் 75 ரன்கள் என்ற சுலபமான இலக்கை துரத்த காத்திருக்கும் ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம். முன்னதாக இத்தொடரில் 3வது ஸ்பின்னராக விளையாடி வரும் அக்சர் பட்டேல் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் 84, 74 என முதலிரண்டு போட்டுகளில் முதன்மை பேட்ஸ்மேன்களை விட பெரிய ரன்களை குவித்து வெற்றியில் கருப்பு குதிரை செயல்பட்டார்.

- Advertisement -

குறிப்பாக 2வது போட்டியில் அஷ்வினுடன் அவர் அமைத்த 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவின் வெற்றியை தீர்மானித்தது. அப்படி பேட்டிங்கில் அற்புதமான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 12* (12) ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது போலவே 2வது இன்னிங்ஸிலும் 15* (39) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார். அதாவது எதிர்புறம் பார்ட்னர் இருந்திருந்தால் நிச்சயமாக தற்போதுள்ள ஃபார்முக்கு இப்போட்டியில் இன்னும் அவர் கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் தற்சமயத்தில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அக்சர் படேல் இப்போட்டியில் பார்ட்னர் இல்லாமல் தடுமாறிய 9வது இடத்துக்கு பதில் 6 அல்லது 7 ஆகிய இடங்களில் விளையாடியிருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் ரோகித் சர்மாவின் மிகப்பெரிய கேப்டன்ஷிப் தவறை சுட்டிக்காட்டியுள்ளார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் கேஎஸ் பரத் பேட்டிங்கில் சொதப்பி பந்து பிடித்து போடும் விக்கெட் கீப்பராக மட்டும் செயல்படும் நிலையில் அவரது இடத்தில் இவரை விளையாட வைத்திருக்கலாமே என்று ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS : என்னடா பிட்ச் இது? இவ்ளோ கஷ்டமா இருக்கு. அரைசதம் அடித்தும் புலம்பிய – சத்தீஸ்வர் புஜாரா

ஏனெனில் ஒருவேளை அக்சர் படேல் கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருந்தால் 75 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு 105 ரன்களாக இருக்கும். அதை ஏற்கனவே இந்த தொடரில் தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலியா நிச்சயம் வெற்றிகரமாக துரத்துவதற்கு திண்டாடும் என்று சொல்லலாம். அஷ்வின் – ஜடேஜா உள்ளிட்ட பவுலர்களும் போராடுவதற்கு இன்னும் சற்று அதிக வாய்ப்பு கிடைத்திருக்கும்.

Advertisement