2012இல் அசாத்தியமா தெரிஞ்ச சச்சின் சாதனையை விராட் கோலி உடைக்கப்போறாரு.. வாசிம் ஜாபர் நம்பிக்கை

Wasim Jaffer
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. துபாயில் விளையாடும் இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வங்கதேசம் மற்றும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 242 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி சதத்தை அடித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சமீப மாதங்களாக தடுமாற்றமாக விளையாடி வந்த அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் தமக்கு மிகவும் பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக 100* ரன்கள் விளாசிய விராட் கோலி தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை மீண்டும் நிரூபித்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 14000 ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையும் அவர் உடைத்தார்.

- Advertisement -

அசத்தியமான 100 சதங்கள்:

இந்நிலையில் இதுவரை 82 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை (100) அடித்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில் 2012இல் சச்சின் 100வது சதத்தை அடித்த போது அதை மற்றவர்கள் நெருங்குவது கூட அசாத்தியமாக தெரிந்ததாக ஜாஃபர் கூறியுள்ளார்.

ஆனால் தனது திறமையால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடி சச்சினின் சாதனையை உடைப்பார் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ஜாபர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டின் ரசிகனாக நீங்கள் விராட் கோலி விளையாடும் வரை பார்க்க விரும்புவீர்கள். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்த ஃபார்முக்கு விராட் கோலி அவுட்டாவதை யாரும் விரும்ப மாட்டார்கள்”

- Advertisement -

சச்சின் மகிழ்ச்சியடைவார்:

“விராட் கோலி நன்றாக விளையாடி ரன்கள் அடிக்கும் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர் 3 – 4 வருடங்கள் விளையாடி அனைத்து சாதனைகளையும் உடைப்பதையே அனைவரும் விரும்புவார்கள். சச்சினின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி உடைப்பதற்கு வாய்ப்புள்ளது போல் தெரிகிறது”

இதையும் படிங்க: மற்ற பவுலர்களால் செய்ய முடியாததை செய்யும் பும்ரா.. கம்ப்ளீட் பேக்கேஜ் உலகின் நம்பர் ஒன் பவுலர்.. அமீர் பாராட்டு

“சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்த போது அது எப்போதும் உடைக்கப்படாமல் இருக்கும் என்பது போல் தெரிந்தது. ஆனால் 2010 முதல் ரன்கள் குவிக்கும் விராட் கோலி இப்போது அந்த அசாத்தியமான சாதனையை உடைப்பதற்குத் தயாராக உள்ளார் என்பது போல் தெரிகிறது. ஒருவேளை அந்த சாதனையை உடைத்தால் சச்சின் டெண்டுல்கரும் அதற்காக மகிழ்ச்சியாகவே இருப்பார்” என்று கூறினார்.

Advertisement