மற்ற பவுலர்களால் செய்ய முடியாததை செய்யும் பும்ரா.. கம்ப்ளீட் பேக்கேஜ் உலகின் நம்பர் ஒன் பவுலர்.. அமீர் பாராட்டு

Mohammed Amir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். ஏனெனில் தனது வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலைக் கொடுத்து வரும் அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார்.

மேலும் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். குறிப்பாக முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் கேப்டனாக ஆஸ்திரேலியாவில் 297 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராகவும் பும்ரா முன்னேறியுள்ளார்.

- Advertisement -

அமீர் பாராட்டு:

அத்துடன் 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் பும்ரா வென்றுள்ளார். இந்நிலையில் 3 விதமான கிரிக்கெட்டிலும் தேவையான நேரங்களில் விக்கெட்டை எடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் திறமை கொண்ட பும்ரா உலகின் நம்பர் ஒன் பவுலர் என்று பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பாராட்டியுள்ளார். அந்த திறமை மற்ற பவுலர்களிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அமீர் பேசியது பின்வருமாறு. “வேகப்பந்து வீச்சு பற்றி நீங்கள் பேசும் போது பும்ரா கம்ப்ளீட் பேக்கேஜ். அவரை நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைத்தால் புதிய பந்து, பழைய பந்து, பாதி புதிய பந்து ஆகிய அனைத்து வகையான பந்துகளிலும் விக்கெட்டை எடுப்பார். ஒருநாள் அல்லது மற்ற ஃபார்மெட்டில் விளையாட வைத்தாலும் அவர் அணிக்கு தேவையான சூழ்நிலையில் அசத்துவார்”

- Advertisement -

கம்ப்ளீட் பேக்கேஜ்:

“சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் அப்படியே அசத்துவதன் காரணத்தாலேயே அவர் கம்ப்ளீட் பேக்கேஜ். எனவே பும்ரா மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். தற்சமயத்தில் அவர் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாக நான் கருதுகிறேன். மற்ற பவுலர்கள் ஏதோ ஒரு வகையான ஃபார்மெட்டில் தடுமாற்றத்தைக் கொண்டுள்ளார்கள்”

இதையும் படிங்க: 1996 அப்ரிடி மாதிரி இங்கிலாந்தை நொறுக்கிய அபிஷேக்கிற்கு இந்த அட்வைஸ் கொடுத்தேன்.. வாசிம் அக்ரம் பேட்டி

“இருப்பினும் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதாலேயே பும்ரா உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கிறார்” என்று கூறினார். அப்படிப்பட்ட பும்ரா தற்போது காயத்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அடுத்ததாக அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement