- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 பைனல் : யார் வேணும்னாலும் பைனல்ஸ் வாங்க. ஆனா அந்த ஒரு விஷயத்துல உஷாரா இருங்க – வாசிம் ஜாபர் கருத்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது பல திருப்பங்களுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அந்த வகையில் குரூப் ஒன்றில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து அணியும், குரூப் இரண்டில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது அரையிறுதி போட்டியில் விளையாடியது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூப்பர் 12 சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளைக் கண்ட பாகிஸ்தான அணி அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட வேளையில் அரையிறுதியில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது.

அந்த வகையில் அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்த பாகிஸ்தான அணி இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது பாகிஸ்தான அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது பாகிஸ்தான அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும்.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. ஒரு கட்டத்தில் அவர்கள் அரையிறுதிக்கு முன்னேற மாட்டார்கள் என்று நினைத்த வேளையில் தற்போது அவர்கள் அரையிறுதியிலும் விளையாடி முதல் அணியாக இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

- Advertisement -

தற்போது அவர்கள் அணியில் உள்ள வீரர்களின் பார்ம் மற்றும் அவர்களது நம்பிக்கையை வைத்து பார்க்கும் போது இறுதி போட்டியில் எந்த அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினாலும் அந்தப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும். இந்த அரையிறுதியில் பெற்ற வெற்றி பாகிஸ்தானுக்கு அவர்களது பலத்தை இருமடங்காக மாற்றி அவர்களுக்கு தைரியத்தை அளித்துள்ளது. தற்போது அவர்களிடம் உள்ள நம்பிக்கையில் நிச்சயம் இறுதி போட்டியில் எந்த அணியாக இருந்தாலும் அவர்களிடம் மோத சற்று பயப்படும்.

இதையும் படிங்க : முக்கிய நேரத்தில் விஸ்வரூபம் எடுத்த பாபர் – ரிஸ்வான் ஜோடி, வெற்றியுடன் படைத்த 2 புதிய உலக சாதனைகள் இதோ

நியூசிலாந்து வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்தாலும் இந்த அரையிறுதி போட்டி அவர்கள் வசம் இல்லை. ஆனால் பாகிஸ்தான் அணி தற்போது ஒருபடி சற்றே பலம் கூடி மிகச் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. இறுதிப் போட்டியில் எந்த அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருந்தாலும் அவர்களை சற்று எச்சரிக்கையுடனே அணுக வேண்டும் என்றும் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை மற்றும் பலம் தற்போது இரு மடங்கு கூடியுள்ளதாக வாசிம் ஜாபர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by