முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வுசெய்து அறிவித்த வாசிம் ஜாபர் – விராட் கோலியின் இடம் யாருக்கு?

Wasim Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளது. இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று விட்டதால் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த இங்கிலாந்து தொடருக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வுசெய்த : வாசிம் ஜாபர்

எதிர்வரும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அனைவரும் கூறிவரும் வேளையில் இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏனெனில் ரோகித் சர்மாவிற்கு பதிலாகவும், விராட் கோலிக்கு பதிலாகவும் அந்த இடங்களை நிரப்புப்போகும் வீரர்கள் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான வாசிம் ஜாஃபர் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அந்த அணியில் :

துவக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சன் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவரை விளையாட வைக்கலாம் என்றும் நான்காவது இடத்தில் கேப்டன் சுப்மன் இல்லை விளையாட வைக்கலாம் என்றும் தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு இடம் அளித்துள்ளார்.

- Advertisement -

ஆறாவது இடத்தில் கருண் நாயருக்கு இடம் அளித்துள்ளார். மேலும் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ஏழாவது இடத்தில் தேர்வு செய்துள்ளார். எட்டாவது இடத்திற்கு ஷர்துல் தாகூர் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தனது முடிவை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் இன்றி மீதமுள்ள மூன்று இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித், கோலி போனதை யூஸ் பண்ணி.. ராகுல் அந்த சாம்ராஜ்யத்தில் பெயரை எழுதனும்.. சஞ்சய் பங்கர் அட்வைஸ்

அதன்படி வாசிம் ஜாபர் தேர்வுசெய்து அறிவித்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன் / அபிமன்யு ஈஸ்வரன், 4) சுப்மன் கில், 5) ரிஷப் பண்ட், 6) கருண் நாயர், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர் / குல்தீப் யாதவ், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement