ரோஹித், கோலி போனதை யூஸ் பண்ணி.. ராகுல் அந்த சாம்ராஜ்யத்தில் பெயரை எழுதனும்.. சஞ்சய் பங்கர் அட்வைஸ்

Sanjay Bangar
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடப் போகும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கிறது. இம்முறை ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. அதனால் இம்முறை இந்தியா வெற்றி பெறுவது கொஞ்சம் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது. ஏனெனில் தற்போதைய இந்திய பேட்டிங் வரிசையில் ராகுல் தான் அதிக அனுபவத்தைக் கொண்டவராக திகழ்கிறார். அத்துடன் ஏற்கனவே 2018, 2021 வருடங்களில் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அவர் சதங்களை அடித்து அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

நல்ல நேரம் வந்தாச்சு:

இந்நிலையில் 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இருந்ததால் போதுமான வெளிச்சமும் தொடர்ச்சியான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்று சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர்கள் ஓய்வு பெற்றதால் கேஎல் ராகுலுக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த நல்ல நேரத்தைப் பயன்படுத்தி 10 வருட அனுபவம் கொண்ட ராகுல் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ராகுல் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் 2014 முதல் இந்திய அணியுடன் இருக்கிறார். இந்த 10 வருட காலங்களை கடந்துள்ள அவருக்கு ரகானே, விராட் கோலி, புஜாரா, ரோகித் போன்ற நட்சத்திர வீரர்களின் நிழல்கள் இல்லாமல் வெளியே வந்து அசத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது”

- Advertisement -

வாய்ப்பை விடாதீங்க:

“இதற்கு முந்தைய காலங்களில் அவர் அந்த நட்சத்திர வீரர்களின் நிழலில் விளையாடினார். ஆனால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் தன்னுடைய முத்திரையைப் பதித்து இந்தக் காலத்தை தனதாக்க முடியும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது இது கேஎல் ராகுலுக்கு சுவாரசியம் நிறைந்த கட்டமாக இருக்கும்”

இதையும் படிங்க: போட்டியா நினைக்காத கோலியை மிஸ் பண்ணுவேன்.. பலவீனத்தை பாதியில் மாத்த முடியாது.. ரூட் பேட்டி

“இதை சரியாக செய்து முடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மகத்தான வீரர்களின் பட்டியலில் ராகுலின் பெயரும் இருக்கும். எனவே பெரிய அனுபவத்தைப் கொண்டுள்ள அவருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஏற்கனவே அவர் உலகளாவிய சூழ்நிலைகளில் சதத்தை அடித்த தன்னம்பிக்கையைக் கொண்டுள்ளார். அதனால் இங்கிருந்து இது கேஎல் ராகுலின் கட்டம்” என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement