போட்டியா நினைக்காத கோலியை மிஸ் பண்ணுவேன்.. பலவீனத்தை பாதியில் மாத்த முடியாது.. ரூட் பேட்டி

Joe Root
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடவில்லை. அதனால் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை இம்முறை இங்கிலாந்தில் மிஸ் செய்வேன் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலியை தாம் எப்போதும் போட்டியாக நினைத்ததில்லை என்றும் ரூட் கூறியுள்ளார். அத்துடன் அனைவரும் நினைப்பது போல அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் பிரச்சனையை விராட் கோலியால் திடீரென பாதியில் மாற்றுவது எளிதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்:

இது பற்றி ஜோ ரூட் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர். 5 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடும் போது ஏதேனும் ஒரு விஷயம் உங்களுடைய ஆட்டத்தில் உங்களுடன் உட்காராமல் சவாலைக் கொடுக்கும். அதை 2 வாரங்கள் விடுமுறை எடுத்து சரி செய்ய உங்களுக்கு நேரம் கிடைக்காது”

“ஒரே போட்டிக்குள் நீங்கள் பெரிய மாற்றத்தை செய்யாவிட்டால் நிம்மதியாக மூச்சும் விட முடியாத. மறுபுறம் நீங்கள் எப்படி அவுட்டானீர்கள் என்பதை நிறைய பேர் தொடர்ந்து பேசுவார்கள். அதையும் தாண்டி விராட் கோலி சதத்தை அடித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வென்றது”

- Advertisement -

கோலியை மிஸ் செய்வேன்:

“இவை அனைத்தும் அந்த பிரச்சனையை உங்களுக்கு சாதகமாக மாற்ற உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியதாகும். அது பேட்டிங் ஃகார்டை மாற்றுவதாக இருக்கலாம் அல்லது வெள்ளைக் கோட்டுக்கு வெளியே வந்து விளையாடுவதாக இருக்கலாம் அல்லது பெரிய டெக்னிக்கல் மாற்றங்கள் செய்யாமல் லெக் சைட் பகுதியில் மட்டும் விளையாடுவதைப் பற்றியதாக இருக்கலாம்”

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய மண்ணில் செய்ததை ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணிலும் செய்வார் – ஜோ ரூட் பாராட்டு

“நீங்கள் அந்த மாற்றத்தை செய்யும் போது நிறைய பயன்களும் பாதகங்களும் கிடைக்கலாம். அதை செய்வது தகுதியானது என்றால் ஒவ்வொரு முறையும் நீங்கள் அதற்காக வேலை செய்ய வேண்டும். விராட் கோலியுடன் ஒருபோதும் நான் போட்டியிட்டதில்லை. விராட் கோலி என்பவர் எப்போதும் “வாவ் என்ன ஒரு அற்புதமான பிளேயர்” என்று நான் நினைத்து போற்றக்கூடியவர். களத்தில் நாங்கள் சந்தித்த அந்த சண்டைகளை மிஸ் செய்வேன். ஆனால் இது மற்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் முத்திரையைப் பதிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது” என்று கூறினார்.

Advertisement