இந்த வருட ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் மோத இருக்கும் இரு அணிகள் இதுதான் – வாசிம் ஜாபர் கணிப்பு

- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா போன்று கொண்டாடப்படும். 2008 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 12 ஐபிஎல் தொடர்களில் நடைபெற்று முடிந்து விட்டன.. யாரும் எதிர்பாராத வகையில் 13வது ஐபிஎல் தொடர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Ipl cup

இந்த ஐபிஎல் தொடர் எப்போது மீண்டும் துவங்கும் என்று ரசிகர்களும் வீரர்களும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் துவக்க வீரரும், உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவானான வாசிம் ஜாபர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகளை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

- Advertisement -

இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடைபெற்றால் நன்றாக இருக்கும். நான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் அணி கண்டிப்பாக வரும். அந்த அணியை எதிர்த்து எந்த அணி ஆடப்போகிறடது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

எந்த அணியாக இருந்தாலும் பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார் வாசிம் ஜாபர். இதுவரை நடந்துள்ள தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் 2 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Kxip

ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன. இதில் பெங்களூர் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் ஐ.பி.எல் கோப்பையை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement