இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று (நவம்பர் 27-ஆம்) தேதி ஹாமில்டன் நகரில் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அப்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகையில் ஐந்தாவது ஓவரின் போது மழை காரணமாக போட்டி தடைப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததன் காரணமாக போட்டியானது 50 ஓவர்களில் இருந்து 29 ஓவராக குறைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 29 ஓவர்களாக போட்டி மாற்றி அமைக்கப்பட்டதால் அப்போது களத்தில் இருந்த சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியை கையில் எடுத்தனர். ஆனால் மீண்டும் போட்டியானது 13-வது ஓவரை எட்டிய நிலையில் மீண்டும் பெய்த மழை காரணமாக போட்டி மறுபடியும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த போட்டி நடத்த முடியாது என்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது கைவிடப்பட்டது என அம்பயர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்ட பின்னர் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாஃபர் புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : மழை நின்று போட்டி முதலில் துவங்கிய போது தவான் அதிரடியாக விளையாட முற்பட்டு ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் அதன்பிறகு இந்திய அணி மிகச் சிறப்பாக நியூசிலாந்து பவுலர்களை கையாண்டது.
குறிப்பாக சுப்மன் கில் நல்ல டச்சில் மிகச் சிறப்பான ஷாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தார். அதேபோன்று தவான் ஆட்டம் இழந்து வெளியேறியதும் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்று நினைத்த வேளையில் போட்டி 29 ஓவராக போட்டி குறைக்கப்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவ் வந்து பாசிட்டிவாக விளையாடியது பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது.
இப்படி சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இன்டன்ட்டுடன் விளையாடியதை பார்க்கையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று தான் கருதுவதாக வாசிம் ஜாபர் கூறினார். இன்றைய போட்டியில் இந்திய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 89 ரன்களை குவித்து இருந்தது. அப்போது சுப்மன் கில் 45 ரன்களுடனும், சூரியகுமார் யாதவ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையும் படிங்க : ஏன் அடிச்சுக்குறீங்க சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கொடுத்தாலும் ஒன்னும் நடக்க போறதில்ல – உண்மையை விளக்கும் ஆஷிஷ் நெஹ்ரா
இந்த இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டதால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை கடைசி போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தால் நியூசிலாந்து அணி இந்த தொடரை இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.