தோனி செய்த இந்த ஒரு செயல் போதும். வேறென்ன வேணும் அவரை பத்தி சொல்ல – தோனியை புகழ்ந்த வாசிம் ஜாபர்

Jaffer
- Advertisement -

இந்தாண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட 14 ஆவது ஐ.பி.எல் தொடரானது துரதிஷ்டவசமாக வீரர்களிடையே பரவிய கொரோனா காரணமாக தற்போது இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்தனர். அதன்படி சி.எஸ்.கே அணி நிர்வாகமும் அவர்களது வீரர்கள் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்தது.

- Advertisement -

ஆனால் தோனி மட்டும் தான் கடைசியாக ஹோட்டலில் இருந்து வெளியேறுவதாக கூறிவிட்டார். மேலும் அது குறித்து அவர் எடுத்த முடிவில் கூறியதாவது : முதலில் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து அவர்களது நாட்டுக்கு திரும்ப வேண்டும். அதன் பின்னர் அணியில் உள்ள இந்திய வீரர்களும் பத்திரமாக அவரவரது நகரங்களுக்கு செல்ல வேண்டும். அதன் பின்னரே நான் இங்கிருந்து கடைசி ஆளாக எனது வீட்டுக்கு (ராஞ்சிக்கு) புறப்படுவேன் என்று தோனி கூறிவிட்டார்.

அதன்படி சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் புறப்பட்டு பத்திரமாக சென்ற பிறகே தோனி கடைசியாக ஹோட்டலில் இருந்து வெளியேறி தனது ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் அணி வீரர்களின் நிலையை முன்வைத்து தோனி எடுத்த இந்த முடிவை பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை பாராட்டியுள்ளார்.

தோனியின் இந்த செயலை அவர் பகிர்ந்தது மட்டுமின்றி அவர் எடுத்த இந்த முடிவு மிகச் சரியானது என்றும் அவர் கடைசி வரை இருந்து அவருடைய வேலையை முடித்துக் கொண்டு சென்றுள்ளார் தோனி ஒருவராலேயே இதுபோன்ற விடயங்களை செய்யமுடியும் என்று அவரைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமின்றி தோனி எடுத்த இந்த முடிவு ரசிகர்கள் இடையே ஏற்கனவே வரவேற்பினை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement