
உலகம் முழுவதிலும் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடது கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. உலகில் பெரும்பாலானவர்கள் வலது கையைத் தான் எழுதுவதற்கு உட்பட பல்வேறு விஷயங்களுக்கு இயற்கையாக பயன்படுத்துவார்கள். இருப்பினும் சிலர் மட்டுமே தனித்துவமாக இடது கையை பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால் கிரிக்கெட்டில் வலது கையை விட இடது கை வீரர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
குறிப்பாக வேகப்பந்துவீச்சு துறையில் வலது கை வீரர்களை விட இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஸ்விங் செய்வதை பார்க்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக வாசிம் அக்ரம் போன்றவர்களை சொல்லலாம். அதே போல வலது கை பேட்ஸ்மேன்களை விட இடது கை பேட்ஸ்மேன்கள் அடிக்கும் கவர் ட்ரைவ் மிகவும் கச்சிதமாகவும் புத்தகத்தில் அச்சடித்தது போல இருக்கும்.
கனவு அணி:
அதற்கு சான்றாக குமார் சங்கக்காராவை குறிப்பிடலாம். இந்நிலையில் சர்வதேச இடது கையாளர்கள் தினத்தில் தம்முடைய இடது வீரர்கள் மட்டுமே நிரம்பிய கனவு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் வெளியிட்டுள்ள அணிகளில் ஜாம்பவான் சௌரவ் கங்குலி இல்லாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகும்.
ஏனெனில் 1995 – 2008 வரையிலான காலகட்டங்களில் அபாரமாக விளையாடிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய இடது கை பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் அவரை 2 அணிகளிலும் தேர்ந்தெடுக்காத வாஷிம் ஜாபர் இந்தியாவின் மகத்தான இடது கை பவுலர் ஜகீர் கானை தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல தற்சமயத்தில் அசத்தி வரும் குல்தீப் யாதவ் அவருடைய 2 அணிகளிலும் இடம் பிடித்துள்ளார்.
மேலும் அவரது கனவு ஒருநாள் அணியில் இந்திய முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் இடம் பிடித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒரு நாள் தாமதம். ஆனால் இதோ என்னுடைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் இடது கையாளர்கள் அணி. உங்களுடையது என்ன?” என்று பதிவிட்டுள்ளார். வாசிம் ஜாபர் இடது கை டெஸ்ட் அணி:
இதையும் படிங்க: 13 வருடம்.. தமிழ்நாடு அணியிலிருந்து வெளியேறி கேரள அணியில் சாம்சனுடன் சேர்ந்த பாபா அபராஜித்.. காரணம் என்ன?
மேத்தியூ ஹைடன், குமார் சங்கக்காரா, பிரையன் லாரா, கிரேம் பொல்லாக், ஆலன் பார்டர் (கேப்டன்), கேரி சோபர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் (கீப்பர்), வாசிம் அக்ரம், ஜாகீர் கான், ஜான்சன்/வாஸ்/போல்ட், குல்தீப் யாதவ்
ஒருநாள் அணி: மேத்தியூ ஹைடன், சனாத் ஜெயசூர்யா, குமார் சங்ககாரா (கீப்பர்), பிரைன் லாரா (கேப்டன்), யுவராஜ் சிங், மைக்கேல் பெவன், லன்ஸ் க்ளூஸ்னர் வாசிம் அக்ரம், ஜாகிர் கான், குல்தீப் யாதவ்