ஆல்டைம் சிறந்த லெவன் ஐ.பி.எல் அணியை வெளியிட்ட வாசிம் ஜாபர். கேப்டன் யார் தெரியுமா ? – விவரம் இதோ

- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இந்தியாவின் உள்ளூர் ஜாம்பவானான வாசிம் ஜாபர் தற்போது முதல் தர போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். ஆனால், இவரை மும்பை கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. அதனால் உத்தரகாண்ட் கிரிக்கெட் வாரியம் இவரை தலைமை பயிற்சியாளராக அறிவித்துள்ளது.

Jaffer

தற்போது இவருக்கு 42 வயதாகும் இவர் உள்ளூர் போட்டிகளில் இவர் படைத்த சாதனைகளே இல்லை எனலாம். அந்த அளவு முதல்தர போட்டியில் அனுபவம் கொண்ட அவர் இந்நிலையில் தற்போது ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த அணி ஒன்றை தேர்வு செய்து அறிவித்துள்ளார் வாசிம் ஜாபர்.

- Advertisement -

அந்த அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி வீரர் கிறிஸ் கேல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இருக்கின்றனர். மூன்றாவது இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக இருந்த இருந்த சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளார். அவர் கடந்த 12 ஐபிஎல் தொடர்களில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 400 ரன்களை அடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raina

நான்காவது இடத்திற்கு விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாபர். இவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 2016ம் ஆண்டு ஒரே தொடரில் 4 சதங்களை விளாசியவர் விராட் கோலி. கேப்டனாக இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் தோனியை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாபர் .விக்கெட் கீப்பராக இவரே செயல்படுவார்.

- Advertisement -

ஆல்-ரவுண்டராக 2 பேரை தேர்வு செய்துள்ளார். ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா மற்றொன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரே ரஸல். சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஒன்று ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் மற்றொன்று இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Dhoni

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக இருவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இரண்டு தேர்வு செய்துவிட்டார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளராக இருக்கின்றனர். 12வது வீரராக சென்னையின் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர்

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் ஐபிஎல் அணி:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், அஷ்வின், பும்ரா, மலிங்கா.

Advertisement