தோனியை மட்டும் குறை சொல்லாதீங்க.. இது நமக்கு தெரிஞ்ச சிஎஸ்கே இல்ல.. தோல்விக்கு இதான் காரணம்.. வாசிம் ஜாபர்

Wasim Jaffer
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வென்றது. ஆனால் அடுத்த 3 போட்டிகளில் தொடர்ந்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு விழுந்துள்ளது. அந்த தோல்விக்கு தோனி தான் காரணம் என்றும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பெருகி வருகின்றன.

உண்மையில் இந்த வருடம் பவர் பிளே ஓவர்களில் 30 ரன்கள் தாண்டுவதற்குள் சென்னை 2 – 3 விக்கெட்டுகளை இழந்து விடுகிறது. அடுத்ததாக வரும் சிவம் துபே உள்ளிட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடத் தடுமாறுகிறார்கள். அதன் காரணமாக லோயர் ஆர்டரில் ஜடேஜா, தோனி ஆகியோராலும் பெரிய ரன்கள் குவித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

தோனி மட்டுமே காரணமா:

அதே சமயம் தோனியும் ஆனதாகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் அதிரடியாக விளையாடவில்லை என்பதும் நிதர்சனமாகும். அதற்காக தோனி மட்டுமே தோல்விக்குக் காரணம் என்று சொல்லி விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மொத்த பேட்ஸ்மேன்களும் ரன்கள் அடிக்க தடுமாறுவதே அடுத்தடுத்த தோல்விகளுக்கு காரணம் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

எனவே தோனியை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கும் அவர் சிஎஸ்கே அணி பொதுவாக பிளேயிங் லெவனில் மாற்றங்கள் நிகழ்த்தாது என்று கூறியுள்ளார். ஆனால் இம்முறை ஏராளமான மாற்றங்கள் நிகழ்வதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சென்னை ஆரம்பத்திலேயே நிறைய விக்கெட்களை இழந்து விடுகிறது”

- Advertisement -

இது சிஎஸ்கே அணியே இல்ல:

“ஃபார்ம் அல்லது ஷாட் செலக்சன் அல்லது அணித் தேர்வு உட்பட எதுவுமே சென்னை அணியில் சரியாக இல்லை. அவர்கள் அதிகமான வீரர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதால் நாம் அணியில் இருப்போமா இல்லையா என்ற சந்தேகம் சிஎஸ்கே வீரர்களிடம் இருந்துள்ளது. பொதுவாக சென்னை அணி சீரான வேகத்தில் நல்ல முடிவுகளை எடுக்கக்கூடிய அணியாகும்”

இதையும் படிங்க: 75 வருட ஹேலி வால் நட்சத்திரம் மாதிரி.. மேக்ஸ்வெல் 75க்கு ஒருமுறை இதை செய்றாரு.. சஞ்சய் மஞ்ரேக்கர்

“ஆனால் தற்போதைய அணி அந்த சிஎஸ்கே போல இல்லை. தற்சமயத்தில் சென்னை அணி பதற்றமடைந்தது போல் தெரிகிறது. அவர்களுடைய டாப் ஆர்டர் நெருப்பாக விளையாடவில்லை. துபே அதிரடியாக விளையாடாததால் அவர்களது பேட்டிங் விரைவாக மூடி விடுகிறது. அதனால் பின்னடைவைச் சந்திக்கும் அவர்கள் அதை மாற்ற முயற்சிப்பதாகக் கூட தெரியவில்லை. இந்த அணுகுமுறை எனக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. கடந்த 2 போட்டிகளிலும் அவர்கள் வேகமாக தங்களது கடையை மூடி விட்டனர். இது சிஎஸ்கே அணியின் பெரியப் பிரச்சனை” என்று கூறினார்.

Advertisement