நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. குறிப்பாக தங்களது கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்கள் கழித்து பெங்களூரு, 15 வருடங்கள் கழித்து டெல்லிக்கு எதிராக சென்னை தோற்றது. அதனால் இது தான் சமயம் என்று முடிவெடுத்துள்ள எதிரணி ரசிகர்கள் தோல்விக்கு தோனி முழுமையான காரணம் என்று விமர்சித்து வருகிறார்கள்.
எனவே 43 வயதில் காலம் கடந்த தோனி இனிமேலும் விளையாடாமல் ஓய்வு எடுத்து வீட்டில் உட்கார வேண்டும் என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதே போல சில முன்னாள் வீரர்களும் தோனி ஓய்வு பெற வேண்டும் என்று விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் ஹாட்ரிக் தோல்விக்கு தோனி காரணம் இல்லை என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
தோனி காரணமில்ல:
அதே சமயம் தோனி இப்படி தடுமாற்றமாக விளையாடுவதைப் பார்ப்பது மனதுக்கு கடினமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே கேப்டனாக இல்லாத பட்சத்தில் தோனி ஓய்வு பெறலாம் என்று தெரிவிக்கும் ஜாபர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆம் ஒருவேளை தோனி கேப்டனாக இல்லாமல் போனால் விடைப் பெறலாம். அவர் இந்த வழியில் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது வலிக்கிறது”
“தோனி வருடம் முழுவதும் நிறைய கிரிக்கெட்டை விளையாடுவதில்லை. ஐபிஎல் தொடரில் மட்டும் 2 மாதங்கள் விளையாடுவதாலேயே அவர் கீழே பேட்டிங் செய்ய வருகிறார். ஆனால் அவருடைய அணி ஆரம்பத்திலேயே 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விடுகிறது. அதனால் அஸ்வினுக்கு பின்னே வருவதைத் தவிர்த்து அதற்கு எந்த வழியும் இல்லை”
தடுமாறும் சென்னை:
“இருப்பினும் கடந்தப் போட்டியில் அவர் 7வது இடத்தில் வந்ததைப் பார்த்தது நன்றாக இருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரன்கள் குவிப்பதில்லை என்பது சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பிரச்சனையாகும். அதனால் அவர்கள் போட்டியைத் துரத்துவது போல தெரியவில்லை. இது பழைய சிஎஸ்கே அணி போல இல்லை. சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்படும் வீரர்கள் அசத்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்”
இதையும் படிங்க: எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் இது நடந்தா சந்தோஷம் தான் – எம்.எஸ் தோனி ஓபன்டாக்
“ஆனால் இம்முறை ராகுல் திரிபாதி – தீபக் ஹூடா போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் சிஎஸ்கே அணிக்காக பெரியளவில் திரண்டு வந்த ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன். சிஎஸ்கே தங்களுடைய சொந்த மண்ணில் இந்தளவுக்கு தடுமாறுவதை நான் எப்போதும் பார்க்கவில்லை” என்று கூறினார்.



