அணிக்காக என்னாமா உழைக்கிறாரு, இனிமேல் யாராலும் ராகுல் இடத்தை டச் பண்ணவே முடியாது – வாசிம் ஜாபர் கூறும் காரணம் என்ன

KL Rahul Wasim Jaffer
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்த இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக களமிறங்கப் போகும் வீரர்களை கண்டறியும் தொடராகவும் கருதப்படும் இத்தொடரில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து சுமாரான ஃபார்மில் தவிக்கும் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிகர் தவானை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் தொடக்க வீரராக உருவெடுத்த அவரை வருங்கால கேப்டனாகவும் பிசிசிஐ வளர்க்க நினைத்தது.

IND vs SL Rahul Rohit

ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை எடுத்தாலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி முக்கிய நேரத்தில் அவுட்டாகி தோல்விக்கு காரணமாகும் வகையில் செயல்பட்ட அவர் 2022 ஐபிஎல் தொடருக்குப்பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து அதை விட மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலான வெளிப்படுத்தி அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திய அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

டச் பண்ண முடியாது:
இருப்பினும் துணை கேப்டனாக இருந்ததால் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்த அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. அதனால் அவருடைய துணை கேப்டனை பறித்த தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் இந்த தொடரில் கடைசி வாய்ப்பாக விக்கெட் கீப்பராக 5வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது. அதில் முதல் போட்டியில் தடுமாறிய அவர் கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது போட்டியில் 216 ரன்களை துரத்தும் போது 86/4 என சரிந்த இந்தியாவை நங்கூரமாக நின்று கடைசி வரை அவுட்டாகாமல் 64* (103) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

Rahul

மேலும் இதற்கு முன்பே ஓப்பனிங் இடத்தை விட மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டது போல் பேட்டிங்கில் அசத்த துவங்கியுள்ள அவர் தற்போது விக்கெட் கீப்பிங் வேலையையும் சேர்த்து செய்கிறார். அதனால் இதே போல் விளையாடும் பட்சத்தில் அவரது இடத்தை யாரும் நெருங்க முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் காயத்திலிருந்து குணமடைந்து ரிசப் பண்ட் வந்தால் மட்டுமே சவாலை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை கேஎல் ராகுல் இதே போல் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்தால் அவருடைய இடத்தை யாராலும் தொட முடியாது. சொல்லப்போனால் ரிஷப் பண்ட் மட்டுமே காயத்திலிருந்து குணமடைந்து வந்தால் அவரது இடத்துக்கு சவாலை கொடுக்க முடியும். ஆனால் தற்போதைய நிலைமையில் நீங்கள் 5வது இடத்தில் ராகுலை தவிர்த்து வேறு யாரையும் விளையாட வைப்பது மிகவும் கடினமாகும். குறிப்பாக வேறு வகையான கிரிக்கெட்டில் வேண்டுமானால் அதைப் பற்றி நீங்கள் விவாதிக்கலாம்”

Jaffer

“ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதுவும் 5வது இடத்தில் அவருடைய பேட்டிங் செயல்பாடுகள் மற்றும் புள்ளி விவரங்கள் முதல் தரத்தில் இருக்கிறது. மேலும் தற்சமயத்தில் அவருடைய பேட்டிங் மற்றும் பார்ம் ஆகியவை பற்றி நிறைய சலசலப்புகளும் விமர்சனங்களும் இருக்கின்றன. அந்த தருணத்தில் மிகவும் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடி தனது அணியை வெற்றி பெற வைத்துள்ளது அவர் பார்முக்கு திரும்புகிறார் என்பதற்கான மிகச்சிறந்த அறிகுறியாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கிரிக்கெட்டை மறந்து ஜாலியாக குத்தாட்டம் போட்ட விராட் கோலி – இஷான் கிசான், 2 வைரல் வீடியோ உள்ளே

அவரது இந்த கருத்தை பார்க்கும் ரசிகர்கள் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் ஏற்கனவே எதுவுமே செய்யாமல் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்த ராகுல் தற்போது விக்கெட் கீப்பிங் செய்வதால் நிச்சயமாக அவருடைய இடத்தை யாரும் தொட முடியாது என்பதில் சந்தேகமில்லை என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் அவர் தற்போது இருக்கும் ஃபார்முக்கு நியாயப்படி அதிரடியாக நீக்கப்பட்டு இரட்டை சதமடித்த இசான் கிசான் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

Advertisement