- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க மட்டும் ஃபிட்டாகி விளையாடுனா.. ஆஸ்திரேலியாவில் இந்தியா ஹாட்ரிக் வரலாறு படைக்கும்.. வாசிம் ஜாபர்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புகழ்பெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024/25 டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்டு ஆஸ்திரேலியாவில் காலம் காலமாக இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது.

ஆனால் 2018/19 தொடரில் விராட் கோலி தலைமையில் 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா அந்த வரலாற்றை மாற்றி எழுதியது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனையை படைத்தது. அதற்கு பதிலடியாக 2019/20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்தியாவை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா வரலாறு காணாத தோல்வியை பரிசளித்தது.

- Advertisement -

ஹாட்ரிக் வெற்றி பெறுமா:
அப்போது விராட் கோலி வெளியேறிய நிலையில் ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா அபாரமாக விளையாடி 2 – 1 (4) கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது. குறிப்பாக முக்கிய வீரர்கள் காயமடைந்த போது வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற இளம் வீரர்களை வைத்தே இந்தியா 32 வருடங்கள் கழித்து காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. இம்முறை அந்தத் தொடர் 5 போட்டிகள் கொண்ட மெகா தொடராக நடைபெற உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் ஃபிட்டாக அத்தொடரில் விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக இந்தியா கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கணித்துள்ளார். மேலும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஐபிஎல் 2024 தொடரில் 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய மயங் யாதவ் ஆகியோரும் வெற்றிக்கு அவசியம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் ரசிகரின் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: இலங்கை தொடர் தோல்விக்காக இந்தியாவை கலாய்த்த மைக்கேல் வாகன்.. 12 வருட வரலாறுடன் வாசிம் ஜாபர் பதிலடி

“ஒருவேளை பும்ரா, ஷமி, சிராஜ் ஃபிட்டாக இருந்து பெரும்பாலான தொடரில் விளையாடினால் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றி பெற இந்தியாவுக்கு சிறப்பான வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் இடது கை வேகப்பந்து வீச்சாளராக புதிய ஆப்ஷனை கொண்டு வருவார். அதே போல மயங் யாதவ் காயத்திலிருந்து குணமடைந்து ஃபிட்டாகி விளையாடத் தயாராக இருந்தால் கருப்பு குதிரையாக செயல்படக்கூடியவர்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -