இதுக்கே சோகமானா எப்படி? அதையும் பாப்பீங்க.. வாசிம் ஜாஃபர் கணிப்பால் ரோஹித் ரசிகர்கள் கவலை

Wasim Jaffer 2
- Advertisement -

விரைவில் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 2015 – 2020 வரை மும்பை அணியில் விளையாடி 4 கோப்பைகளை வெல்வதற்கு உதவிய பாண்டியாவை 2021இல் அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

அப்போது 15 கோடிகள் கொடுத்து வாங்கிய குஜராத்துக்கு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த பாண்டியா அடுத்த வருடம் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றதால் இன்று இந்தியாவின் அடுத்த கேப்டன் என்று பேசப்படும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அப்படி குஜராத் கேப்டனாக இருந்த அவரை சமீபத்தில் டிரேடிங் முறையில் மும்பை வலுக்கட்டாயமாக வாங்கியது.

- Advertisement -

தயாரா இருங்க:
அந்த நிலைமையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் சச்சின், பாண்டிங் ஆகியோரால் பெற்றுக் கொடுக்க முடியாத கோப்பையை 2013 – 2023 வரையிலான காலகட்டங்களில் 5 முறை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நன்றி மறந்து கழற்றி விட்ட மும்பை அணியின் முடிவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அத்துடன் இன்ஸ்டாகிராமில் மும்பை அணியை லட்சக்கணக்கான ரோகித் சர்மா ரசிகர்கள் பின்தொடர்வதை நிறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரோகித் சர்மாவை இவ்வளவு சீக்கிரமாக மும்பை நிர்வாகம் கழற்றி விடும் என்று எதிர்பார்க்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதை விட இந்த அறிவிப்பால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இந்தியாவின் கேப்டனாக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே அதையும் பார்க்க ரோகித் சர்மா ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவிடமிருந்து இவ்வளவு விரைவாக மும்பை இந்தியன்ஸ் நகர்ந்துள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. டிரேடிங் முறையில் வாங்கிய போதே கேப்டனாக வருவீர்கள் என்பதை பற்றி பாண்டியாவிடம் மும்பை நிர்வாகம் பேசியிருக்கும்”

இதையும் படிங்க: அதை சூரியகுமார் திருடுவதை நினச்சா சோகமா இருக்கு.. சீக்கிரமா அந்த பரிசு கொடுப்பேன்.. ஏபிடி ஓப்பன்டாக்

“ஆனால் ரோகித் சர்மாவிடம் அதைப்பற்றி மும்பை நிர்வாகம் பேசியதா என்பது எனக்கு தெரியாது. இந்த சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் அங்கே ரோஹித் கேப்டனாக இருந்தால் அவர் தலைமையில் பாண்டிய விளையாட வேண்டும். ஆனால் அது எப்படி நடக்கும்” என்று கூறினார். அதாவது ஐபிஎல் தொடரிலேயே ரோகித் தலைமையில் விளையாட விரும்பாமல் கேப்டன்ஷிப் பதவியை வாங்கிய பாண்டியா டி20 உலகக் கோப்பையில் மட்டும் விடுவாரா என்று ஜாபர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement