அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இருந்ததை அடுத்து இலங்கை நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடர தொடரை வென்ற ஒரே மாதத்தில் இப்படி ஒரு படுதோல்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 1997-ஆம் ஆண்டிற்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து இலங்கை அணியிடம் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்திய அணியில் விராட் கோலி, கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சிராஜ், ரிஷப் பண்ட் என நட்சத்திர வீரர்கள் இருந்தும் இந்திய அணி அடைந்த தோல்வி ஏமாற்றத்தை அளிப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தொடர் முழுவதும் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது :
இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி வெல்ல தகுதியான ஒரு அணி என்று நினைக்கிறேன். இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை இழந்திருப்பதை நினைத்து எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் ஒரு அங்கம்தான். ஆனால் எனது கவலை எல்லாம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நினைத்துதான்.
இதையும் படிங்க : ரொம்ப சிம்பிளா கிரிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ
ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாட உள்ளது என்று அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் கூற வருவது யாதெனில் : சரியான பயிற்சியும், போட்டிகளும் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு அந்த தொடரை அணுகப்போகிறது என்பதே அவரது கவலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



