பும்ராவுக்கு பதில் ஷமியை விட அவர்தான் டி20 உ.கோ’யில் விளையாட தகுதியானவர் – காரணத்தை விளக்கும் வாசிம் ஜாபர்

Jaffer
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் துவங்குவதால் அதில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது. அதில் கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் 14 பேர் கொண்ட அணி மட்டுமே தற்சமயத்தில் ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இப்படி மாற்று வீரர் இல்லாத பும்ரா போன்ற முக்கிய பந்து வீச்சாளர் விலகியது இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் நிலைமையைச் சமாளிப்பதற்காக அவருக்கு பதில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் முகமத் ஷமி அல்லது தீபக் சஹர் ஆகியோரில் யாராவது ஒருவர் முதன்மை அணியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Shami

- Advertisement -

அந்த வீரர் யார் என்பது ஆஸ்திரேலியாவுக்கு சென்றதும் இந்தியாவில் தற்போது துவங்கியுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்ததும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதில் கடந்த உலகக் கோப்பையில் முழுமையாக விளையாடியும் 30 வயதை கடந்து விட்டார் என்பதற்காக கழற்றிவிடப்பட்ட முகமது சமி ஐபிஎல் 2022 தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்து முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி நல்ல பார்மில் இருப்பதால் அவரை தேர்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சஹர் சரியானவர்:
இருப்பினும் கடந்த ஒரு வருடமாக எவ்வித சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடாத முகமது சமி நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்ட போதிலும் கடைசி நேரத்தில் துரதிஷ்டவசமாக விலகினார். எனவே தற்சமயத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் எந்தளவுக்கு பார்மில் இருக்கிறார் என்று தெரியாத முகமது ஷமியை விட தீபக் சஹர் தான் பும்ராக்கு பதில் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

Deepak Chahar IND

கடந்த 2019இல் அறிமுகமாகி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர், சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் ஆகிய சாதனைகளைப் படைத்து உலக கோப்பையில் விளையாடும் முதன்மை பவுலராக காத்திருந்த தீபக் சஹர் ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்தால் 2 மாதங்கள் விலகி மீண்டு வந்தபோது ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் ஆகியோர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு அவரது இடத்தை ஆக்கிரமித்து விட்டனர். அதனால் உலக கோப்பையில் விளையாட மீண்டும் முதலிலிருந்து துவங்கிய தீபக் சஹர் ஜிம்பாப்வே தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று கம்பேக் கொடுத்த போதிலும் ஸ்டாண்ட் பை லிஸ்டில் மட்டுமே இடம் பிடித்தார்.

- Advertisement -

இருப்பினும் மனம் தளராமல் சமீபத்திய தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் பந்து வீச்சில் அசத்திய அவர் பேட்டிங்கிலும் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமையை வெளிப்படுத்தினார். எனவே ரன்களை வழங்கும் ஹர்ஷல், அர்ஷிதீப் ஆகியோரை விட பந்து வீச்சில் அசத்தலாகவும் கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய தீபக் சஹர் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் வாசிம் ஜாபர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Jaffer

“அனேகமாக தீபக் சஹர் தான் சரியான மாற்று வீரர் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது மீண்டும் விளையாட துவங்கியுள்ள அவர் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். அவர் பந்துவீச்சில் அசத்துவதுடன் பேட்டிங்கிலும் பங்களிக்கும் திறமை பெற்றவர். மேலும் புதிய பந்தில் தரமாக பந்து வீசும் வல்லமை பெற்றுள்ள அவருடைய வேரியேஷனில் எவ்வித தடுமாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. அதேபோல் டெத் ஓவர்களில் வாய்ப்புக் கொடுத்தால் நிச்சயம் ஏதேனும் செய்து கட்டுக்கோப்புடன் பந்து வீசுவார்”

“மறுபுறம் சமி எவ்விதமான கிரிக்கெட்டும் விளையாடவில்லை. எனவே எவ்வித போட்டியிலும் விளையாடாமல் நேரடியாக அவரை உலகக்கோப்பை அணியில் சேர்ப்பது நியாயமாக இருக்காது. ஒருவேளை அவர் தேர்வு செய்யப்பட்டால் பயிற்சிப் போட்டிகளில் மட்டும் விளையாடி நேரடியாக உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு ஏற்படும் என்பது சரியான வழியல்ல. எனவே தீபக் சஹர் தான் சரியான மாற்று வீரர்” என்று கூறினார்.

Advertisement