41 வயதில் தனது ஓய்வை அறிவித்த இந்திய வீரர். இவர் நிச்சயம் ஜாம்பவான் தான் – ரசிகர்கள் வருத்தம்

jaffer6
- Advertisement -

இந்தியா உள்ளூர் கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்த வாஸிம் ஜாபர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மும்பை அணிக்காக தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய அவர் தற்போது விதர்பா அணிக்காக ஆடும் போது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ளார் . அவருக்கு தற்போது 41 வயதாகிறது.

Jaffer 1

- Advertisement -

மொத்தமாக 260 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள வாஸிம் ஜாபர் 19410 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 50.67 ஆகும் மொத்தம் 57 சதங்களையும், 93 அரை சதங்களையும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 314 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக மொத்தம் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1944 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும் 11 அரை சதங்களும் அடங்கும். அதற்குப் பின்னர் இந்திய அணிக்கு விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2006ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இரட்டை சதம் விளாசியுள்ளார். இங்கே இவர் அடித்த 212 ரன்கள்தான் இவரது அதிகபட்ச ரன் ஆகும்.

Jaffer

டெஸ்ட் போட்டிகளை தவிர இரண்டு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். மும்பை முதல்தர அணிக்காக கேப்டனாகவும் செயல்பட்ட இவர் தன் தலைமையில் இரண்டு முறை ரஞ்சி கோப்பை தொடரில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.

- Advertisement -

இவ்வாறு அளப்பரிய திறமையும் உள்ளூர் போட்டிகளில் டன் கணக்கில் ரன்களை அடித்த இவருக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில் இவரது காலத்தில் சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவக், ராகுல் டிராவிட் , விவிஸ் லட்சுமணன் போன்ற வீரர்கள் அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடினர்.

Jaffer

இதன் காரணமாக இப்படி ஒரு ஜாம்பவானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது 41 வயதான இவர் கிரிக்கெட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்றுவிட்டார். மேலும் இவரது ஓய்வு அறிவிப்பிற்கு வருத்தத்தை தெரிவித்த ரசிகர்கள் அவரை பாராட்டியும் இந்த பதிவினை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement